ஒவ்வொரு மரத்திற்கும்
ஒரு கதை இருந்தது
ஒவ்வொரு மரத்திற்கான கதையிலிருந்து
கிளை பரப்பிய காட்டைப்பற்றிய கதை
ஒரு பறவையின் மொழியில் எழுதப்பட்ட கதையை
கனவிலிருந்து விழித்தெழுந்த யமுனா
ஒரு மரத்திலிருந்து ஆரம்பித்து
காட்டைப் பற்றிய கதையாகச் சொன்னாள்
காட்டைப் பிளந்து கடந்து வந்ததொரு இசை
ஆத்மாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்க
சொல்லபடும் கதை
புரிந்துகொள்ளப்படுகிறது
காட்டின் கதை
காட்டின் பாதையைப்போல் வெவ்வேறு திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது
வலுத்த பெருமழை ஒன்றிற்கு
கதைக்கு இடையில்
ஒரு தேநீரைப் பருகச்சொன்னவள்
ஒரு யானையைப்போல
மிகச்சாதரணமாக காட்டின் கதையைக் கடத்திப்போனாள்
யமுனா வீடு – 23
தொடர் கவிதை - 23