யமுனாவீடு -78

- Advertisement -

ஓர் இரவில்தான்
கேள்விகள் கேட்கப்படுகிறது
கேள்விகளுக்குச்
சமாதானங்கள் தேவையில்லை

நுண்ணுணர்களைச் சொல்லவியலாத
மெய்யன்பு கொண்டோனை
ஏக இறைவன்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்

உள் உணர்ந்த ஒரு சொல்லுக்காய்
பேரொளி கொண்டோரிடத்தில்
உள் உருகி
நாயிறாய் அமர்ந்திருப்பான்

அவன் தவறறிய
பார்த்துக்கொண்டிருக்கும்
கடல்கொள்ளட்டும்
கொண்ட அவன் மனம்
மாறப்போவதில்லை.

பொய்யன்பு கொண்டிருந்தால்
யமனவன் கைபிடித்திட
பிரமை கண்டவன் ஓடட்டும்
பிணம்போலக் கிடக்கட்டும்

கைகளைப்
பற்றிக்கொண்டிருப்பவன் முன்
யமுனா
நீ
ஓங்காரமாய்
நின்று கொண்டிரு

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -