பழகிய
எல்லா மனிதர்களும்
கனவைப்போல
எழுந்து செல்கிறார்கள்
எதிர்பாராமல்தான்
எல்லாமும் நடந்துவிடுகிறது
அவன் விடாது
சிரிக்கிறான்
கனத்த வாழ்வை சுமக்கும்
யார் ஒருவரும்
இங்கு நினைக்கையில்
செத்துவிடுவதில்லை
வேண்டுதலோடு
அடுத்த நாளுக்கு நகர்கையில்
ஒரு சவ ஊர்வலத்தை
கடந்து போகிறான்
வாழ்க்கையின் அர்த்தம்
எதுவென்று
தேடிக்கண்டடைய அன்றிரவு
கடல் பார்க்கிறான்
வார்தைகளற்று
அமர்திருப்பவனுக்குள்
பேரன்பு பெருகுகிறது
எதுவென்று தெரிந்துகொள்கிறான்
அவனுக்குள்
சாமாதானம் செய்யும் பொருட்டு
கொஞ்சமாக
குழந்தையாகிறான்
கூச்சலிட்டு விலகிப்போகுவமனை
குட்டி யமுனா
கையைப் பிடித்து கடல்பார் என
இழுத்துச்செல்கிறாள்
கடல்
அவனைப்பார்க்கவே
கம்பீரமாக
அலைந்து எழுந்து வருகிறது
குட்டிக்கையைப்
பார்த்தவாறு இருக்கையில்
பேரலை ஒன்று
இழுத்துச்செல்கிறது