யமுனாவீடு -74

- Advertisement -

நாம் வாழும் இந்த வாழ்க்கையில்
ஒரு கணம்
யோசித்துப்பார்ப்போம்
எதற்காக இந்த வாழ்க்கை

நினைவோடிருப்பது
ஆகப்பெரிய சாபம்
இருந்தால்….
ஆரம்பக்கட்டத்தையும் யோசி

நம்பிக்கையோடு இருக்கும்
எல்லோருக்குள்ளும்
ஒரு பயமிருக்கும்
காற்றிற்கு படபடக்கும் சுடர்
எரித்துவிடுவதாக இருக்க வேண்டும்

ஒரு கனவோடு இருப்பவர்கள்
ஏதுமற்றவர்கள்தான்
தனியாய் பேசிக்கொண்டிருப்போம்
மற்றொருவரும்
பேசிக்கொண்டிருக்கலாம்
இருக்கலாம்….

எண்ணங்களெல்லாம்
வண்ணத்துப்பூச்சியாய்
அலைந்துகொண்டிருக்க
யாரேனும் பின்தொடர்ந்து செல்லுங்கள்

யமுனா
உயரத்திலிருக்கும் முழுநிலவு
நகர்ந்துகொண்டே இருக்கிறது
இந்த இரவையும்…

இந்த இரவை நகர்ந்திவிட வேண்டும்
இரு இரு
இந்த இரவை எரித்துவிடுவோம்
இரு இரு
இந்த இரவோடு உறைந்துவிடுவோம்

விடியும்பொழுதில்
இந்த நகரத்திலிருப்பவர்கள்
முருகா என்றுருருகி
கொட்டித்தீர்த்து
நீண்டதொரு ஊளையிடட்டும்

நீலம் பார்த்துக்கொண்டிருந்தவன்
வெறுமையைக் கடந்துபோக
யமுனாவின் தடம் பார்த்து
கடல்நோக்கி
நெடுஞ்சான்கிடையாய்
வீழ்ந்து கிடக்கட்டும்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -