யமுனாவீடு -56

தொடர் கவிதைகள்

- Advertisement -

ஒரு பாதியில்தான் ஆரம்பிக்கிறது
இந்த நாளும்

கால்போன போக்கில்
பெரு நகரம் உருவாகிறது

மனிதர்கள் காணமல் போவது பற்றி
எனக்குத் தெரியும்
திரும்பவும் வருகிறது ஒரு கனவு

யாரோ ஒருவருக்கு பைத்தியம் பிடிக்கிறது
ஒருவர்தான் கருணையுடையவராக இருக்கிறார்

கீச்சொலிகள்
கேட்டுக்கொண்டே இருக்க
சில பறவைகளை வளர்க்க வேண்டும்

தீடிரென்றுதான் இப்படி நிகழும்
வேண்டுதலில்
உன்னைப்பாடுகிறேன்
என்னை ஏமாற்றி
எடுத்துக்கொள்கிறேன்

இடறிவிழுந்தபோது
கைதூக்கிவிட்ட
யாரும் நினைவிலிருப்பதில்லை

இந்த நிமிடத்தில்
கண்களை மூடிக்கொண்டேன்
அணையாத தீபமாய்
எங்கும் நீதான் யமுனா.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -