மெய்நிகர் உலகம் – 9

- Advertisement -

பணம் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் அடுக்கடுக்கான மெய்நிகர் வடிவங்களை இதுவரை பார்த்து வந்த நாம் எந்த ஒரு பொருள் வடிவமும் இல்லாத மின்னணு வகையிலான மதிப்பை இங்கே பார்க்கப் போகிறோம். அதனைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் பிளாக்செயின்(Blockchain) தொழில் நுட்பம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

உங்கள் கையில் ஒரு பத்து ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பத்து ரூபாய் நாளை மாற்றம் செய்து உங்களால் அதற்குரிய பொருளை வாங்க முடியும். அப்படியானால் அந்த பத்து ரூபாயை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் அந்த பணத்திற்கு முதலாளி. அவர் எப்போது அதனை பண்டமாற்றம் செய்து கொள்கிறாரோ அந்த பணம் மற்றொரு கைக்கு மாறி விடுகிறது. இப்படி ஒவ்வொரு கையாக அந்த பணம் மாறும் பொழுது எவ்வளவு பேர் கைமாறி இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த நிலையில், அந்தப் பணம் ஒவ்வொரு வருகைக்கு செல்லும் போதும் அதை யார் எவ்வளவு காலம் வைத்திருந்தார் என்பதை ஒரு பதிவேட்டில் எழுதிக்கொண்டே வந்தால் எப்படி இருக்கும்? இதனை மின்னணு முறையில் செய்வதற்குப் பெயர்தான் பிளாக்செயின் என்பதாகும். 

பிளாக்செயின் என்னும் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவானதுதான் கிரிப்டோகரன்சி(Crypto currency) போன்ற மெய்நிகர் நாணயங்கள். பிளாக்செயின் என்பது ஒரு சாதாரண மின்னணு பதிவேடு தான். ஆனால் இந்த பதிவேட்டின் பல்லாயிரம் பிரதிகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும். இதனால் யாராலும் இந்த பதிவேட்டில் தவறான பரிமாற்றங்களை உருவாக்க முடியாது. இப்பொழுது இதில் இரண்டு விதமான சீட்டுகளை உருவாக்கமுடியும். முதலாவதாக உங்களிடம் இருக்கும் பொருளை பிரித்துக் கொடுக்க முடிந்த தன்மையில் உருவாக்குவது. உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதனை இரண்டு 50ரூபாய் களாக மாற்றி இருவரிடம் உங்களால் கொடுக்க முடியும். அது போன்ற ஒரு கட்டமைப்பை இந்த பிளாக்செயின் குழுவை உருவாக்கினால், இந்த சீட்டுக்களை மெய்நிகர் நாணயங்கள் போலவே பயன்படுத்த முடியும். இந்த முறையில் உருவாக்கப்பட்ட சீட்டுகளுக்கு பெயர்தான் கிரிப்டோகரன்சி. இந்த முறையில் முதலாக உருவாக்கப்பட்ட சீட்டுக்கு பெயர்தான் பிட்காயின் என்பதாகும். சீட்டுகளை பரிமாற்றி பணம் பொருளாக பயன் படுத்த முடியும் என்றாலும் முதலில் சீட்டை உருவாக்குவது யார் என்னும் கேள்வி எழுகிறது. பொதுவாக எந்த ஒரு நாட்டின் மத்திய வங்கியும் தங்கள் நாட்டுக்கு தேவையான பணத்தை அச்சடித்துக் கொள்ளும். ஆனால் இணையத்தில் இதுபோன்ற ஒரே ஒரு தலைமை பொறுப்பு யாருக்குமே இருக்காது. அதனால், இங்கே உருவாக்கப்பட்ட ஒரு ஆச்சரியமான தத்துவம் தான் இந்த பிரச்சனையை சரி செய்தது. அதாவது உலகில் பூமிக்கு அடியில் பல்லாயிரம் டன் தங்கம் புதைந்துள்ளது. இதனை யார் வெற்றி முதலில் இருக்கிறார்களோ அவர்களை அதன் முதன்மை சொந்தக்காரர்கள் ஆவார்கள்.பின்பு பண்டமாற்று முறையில் இது யார் கைக்கு வேணாலும் வந்து சேரலாம். இதைப்போலவே தங்கத்திற்கு பதிலாக ஒரு மிகப்பெரிய பகா எண்(Prime Number) ஒன்றை முதலில் உருவாக்குபவர்கள் தான் அந்த முதல் சீட்டுக்கு உரிமையாளர்கள். இதனை பின்பு பல்வேறு சிறிய மதிப்பு களாக பிரித்து கூட ரூபாய் நோட்டுகள் போல வழங்க முடியும். 

முதலில் பிரித்து வழங்க கூடிய ரூபாய் நோட்டுகளுக்கு சமமாக மெய்நிகர் நாணயங்களை உருவாக்கியவர்கள், பின்பு பிரிக்கமுடியாத ஒரு சீட்டை உருவாக்கினார்கள் அதற்குப் பெயர்தான் NFT (Non fungible token). நீங்கள் உலகத்தில் வேறு யாரும் உருவாக்க முடியாத ஒரு புதுமையான ஓவியத்தை உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை பல கூறுகளாகப் பிரித்து உங்களால் விற்க முடியாது. அதற்காக உருவாக்கப்பட்ட பிரிக்கமுடியாத நாணயம் தான் NFT. யார் வேண்டுமானாலும் ஒரு புதிய பொருளையோ சேவையை உருவாக்கி என்னை பிரிக்க முடியாமல் ஒரு சீட்டின் மூலமாக இங்கே பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வளவு நல்ல விஷயங்கள் கொண்ட இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் அளவுக்கு அதிகமாக ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டதும் இதிலுள்ள மெய்நிகர் வடிவத்தின் ஒரு செயல்பாடுதான். அதனை அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன். அதுவரை நன்றி.

-மீண்டும் சந்திக்கலாம்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -