முயல் வாங்கிக் கொடுப்பதாக
நினைத்திருந்த
தேஜலுக்கு நேற்று
பிறந்தநாள்
இன்று வாழ்த்தினேன்
நேற்றுதான் பிறந்தேன் என்றவளுக்கு
தாமதவாழ்த்தென்று
காதுகளை இழுத்து உக்கிபோட்டேன்
பற்கள் தெரிய சிரித்தவளை
முயல் என்றேன்
மீண்டும் முயல் சிரித்தது
முயல் முயல் என்றேன்
பேச்சைத் துண்டித்து
முயல் தோழியோடு குதித்து ஓடியது.