மின்னல்

மூன்று கவிதைகள்

- Advertisement -

போய் வா…
என்இளம்பிராயத்து
வழித்துணையே…!
இனிப்புடனே
போய் வா…
புதுத் துணையின் கரமிணைப்பில்
ஜிலுஜிலுக்கும் கிளுகிளுப்பில்
பொங்கிவரும் புன்னகையை…
விழிவானம் விம்மிப் பொழியும்
சுடுநீரில் நீயும்
சுருட்டு வந்தேன் ?
போற இடம் பொன்வடிக்க
நீ
தேன் மழையில் தினம் நனைய
கவின் மலரே !
நீயும்
கண்கலங்காது
போய் வா…

??????????????????????????

பொன்தறியே…!
நீயேன்
புலம்புகிறாய் ‌ ?
சிருஷ்டித்தவர்கள்
உன்னை
சரியான நெசவாளியிடமே
விற்றிருக்கிறார்கள்.
நந்தவனமே…!
மனதை எதற்கு
நஞ்சாக்குகிறாய் ?
நாற்று பாவியவர்கள்
உனக்கு
நல்ல காவல்காரனையே
நியமித்துள்ளார்கள்
முத்துமாலையே…!
முல்லைப் பந்தலே…!
முகம் சுளிக்காமல்
மகிழ்வுடன் சென்றுவா…

??????????????????????????

பெளர்ணமி பூத்த
ஒரு
பொன்னிரவில் தானே
நம் சிநேகம்
வேர் பிடித்தது.
பிஞ்சு மனசுகளால்
கை குலுக்கினோம்
பிரியங்களையெல்லாம்
அரும்பு மொழியில் பகிர்ந்து
அளவளாவினோம்.
புரியாத சுகங்கள்
குமிழியிட்ட
அந்தக் கணங்கள்
என்றென்றும் கழறாத சங்கிலியென
அன்று நாம் கர்வப்பட்டோம்.
அதுவோ இன்று
அறுபடவில்லை.
கருகிவிட்டது.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -