வானொலி நிலையம்
இங்கு
இறந்தவர்களின்
பெயர்கள் மட்டுமே
ஒலிப்பரப்பப்படும்.
இறந்தவர்கள்
சண்டைக்கு வரமாட்டார்கள்.
இறந்தவர்கள்
பங்குரிமை கேட்டு
வரமாட்டார்கள்.
இறந்தவர்கள்
தமக்கு மேலும்
புகழ் வேண்டுமென
அடம் பிடிக்கமாட்டார்கள்.
இறந்தவர்கள்
மீண்டும் இறக்கப் போவதாக
மிரட்ட மாட்டார்கள்.
இறந்தவர்கள்
போதவில்லை எனப்
புகாரளிக்க மாட்டார்கள்.
யாரும் கேட்கப் போவதில்லை
எனத் தெரிந்தும்
வானொலி நிலையம்
செயல்படும்.