நித்தம் சோறு தேடித் தினம் தின்று

- Advertisement -

நித்தம் தேடித் தின்றல்

அதன் இயல்பு

காய் கனியும்

சுனை நீரும்

அதன் உணவு

இலவசத்திற்கு

கையேந்தி

உடல் கொழுத்து

பகல் தூங்கி

பிச்சைக்குப் பழகிப் போய்

தானும் கெட்டு, சூழலும் கெடுத்து

யார்வரினும் கையேந்தி

நம்மைப் போல்

அவற்றையும் 

நாசமாக்க வேண்டாம்

இருப்பதோ கொஞ்ச காலம்

கிடைப்பதோ சிறிது நேரம்

ஓடுவதோ தொடரோட்டம்

உபயோகித்த பின்னர்

சுத்தம் செய்து

விட்டுச்செல்லல் மேலோர் பண்பு 

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -