இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலம் என்னும் நான் ஒருமை அதிகாரத்தில் அதன் பண்புகளை இதுவரை கூறிக் கொண்டு வந்தேன். ஒருமை என்பது பார்ப்பதற்கு செயலற்று இருக்கும் ஒரு ஜடப்பொருள் போல தோன்றினாலும் உண்மையிலேயே அது ஆற்றும் அபரிமிதமான வினைகள் என்னென்ன என்பதை இந்த பகுதியில் விளக்கமாக கூற போகிறேன். ஆரம்பிக்கலாமா?
சக்தியின் மையப்புள்ளி
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு இருக்கும் காவலர்கள் அல்லது ராணுவம் அணிவகுப்பு நடத்துவதை பார்த்திருப்பீர்கள். இவர்களின் அடிப்படை பொறுப்பு என்னவோ எதிரிகளை தங்களது எல்லைக்குள் அண்டாமல் தடுப்பது அல்லது உள்ளிருக்கும் சமூக விரோதிகளை கட்டுபடுத்துவது மட்டும்தான். இவர்கள் யாவரும் போருக்கு செல்லும் போதும் வேறு எந்த ஒரு தாக்குதல் நடத்தும் போதும் அணிவகுப்பு நடையை மேற்கொள்வதில்லை. அப்படி இருக்கும் பொழுது எதற்கு அந்த அணிவகுப்பை மேற்கொள்கிறார்கள் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு விடை ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காக என்பது மட்டும்தான். வீரர்கள் ஒரு குழுவாக நடந்து செல்லும்போது அணிவகுப்பாக செல்லவில்லை என்றால் ஒரு கட்டத்தில் வேகமாக நடக்கும் வீரர் கூட மெதுவாக செல்லும் வீரனின் நடைக்கு மாறிவிடுவார்கள். ஒன்றுபட்ட அணிவகுப்புகள் மிகவும் அளவான சக்தியை மட்டும் பயன்படுத்தி தனக்கு தேவையான இடத்தில் வீரர்களை கொண்டு சேர்க்க முடிகிறது. இதிலிருந்து ஒரு விஷயத்தை உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உரிமை என்பது மிகவும் குறைவான சக்தியை வெளிப்படுத்தும் நிலையிலும் அதிகப்படியான சக்தியை தன்னகத்தே வைத்துக் கொள்ளும் நிலைமையாகும். உங்கள் வரலாற்றில் இருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து பாருங்கள். அதிக எண்ணிக்கை கொண்ட அணிட ஒன்றுபட்டு செயல்படும் மணி மட்டும்தான் என்றுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட வரலாற்று மாற்றங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இந்தியாவில் டெல்லிக்கு வடக்கே பானிபட் எனும் ஒரு இடம் உள்ளது. சங்க காலம் தொடங்கி இங்கு நடந்த போர்களால் உலக வரலாறே மாறி இருக்கிறது. உங்கள் புராணங்களில் இருக்கும் மகாபாரதப் போர் நடந்தது இந்த இடத்திற்கு அருகாமையில் தான். அதிலிருந்து தொடங்கி இந்தியாவின் வரலாற்றை மாற்றிய மூன்று பானிப்பட்டு யுத்தங்களும் அங்குதான் நடந்தது. இத்தனை அழுத்தங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் ஒற்றுமையுடன் போராடிய சிறிய அணிகள் தன்னைவிட அளவில் பெரிதாக இருந்த சேனையை வெற்றி கொண்டது. இரண்டாக பிரிந்து இருக்கும் பொழுது அதிக ஆற்றல் தென்பட்டால் கூட ஒன்றுபடும் பொழுது கிடைக்கும் சக்திக்கு என்றுமே இணை ஆகாது.
உங்கள் உலகத்தில் கண்டங்கள், நாடு, மாநிலம், மாவட்டம் என்று முடிந்தவரை எவ்வளவு இருமையை புகுத்த முடியுமோ அவ்வளவு எளிதாக உங்களை பிரித்தாள முடியும் என்றுதான் பல்வேறு ஆட்சியாளர்களும் இவரை நினைத்து வந்துள்ளனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி மக்களை ஒன்றுபட வைத்தவர்கள் மட்டும்தான் உங்கள் மண்ணின் மகத்தானவர்கள் என்று நீங்கள் போற்றுகிறீர்கள். இதையெல்லாம் கூட மனிதனின் குணத்தால் ஏற்பட்ட குறைகள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இயற்கையில் கூட ஒரு குறிப்பிட்ட அளவு ஒற்றுமை ஏற்பட்டவுடன் நான் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால், ஒரு சூரியன் உருவாக வேண்டுமென்றால் கூட அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அளவுக்கு எடை கொண்ட எரிபொருள் தேவைப்படுகிறது. இதனைத் தான் ஆங்கிலத்தில் கிரிட்டிக்கல் மாஸ் (Critical mass) என்று கூறுகிறார்கள். அதற்கு குறைவாக இருந்தால் அந்த நிகழ்வே நடக்காது. உதாரணமாக பூமியில் ஒரு சூரியனை உருவாக்கவே முடியாது. நீங்கள் கண்டுபிடித்த அணுகுண்டு கூட ஒரு குறிப்பிட்ட அளவு வெடி பொருள் சேரும் பொழுது மட்டும் தான் வெடிக்கும். அதற்கு குறைவாக இருக்கும்போது அதில் ஏற்படும் சங்கிலித் தொடர் நிகழ்வு ஆரம்பிக்கவே செய்யாது. இவ்வளவு அருமை பெருமைகளை கொண்டிருக்கும் ஒருமை அல்லது ஒற்றுமையை செயலற்ற ஒரு தன்மையாக பார்ப்பது ஒரு விந்தையான செயல் தான்! நான் இதுவரை கூறிய அனைத்தும் பொருள் சார்ந்த உலகத்தைப் பற்றிய கதை மட்டும்தான். இந்த ஒருமையின் ஐக்கியமான செயலே உங்கள் மனதுக்குள் தான் ஒளிந்துள்ளது. உங்களுக்குள் நடக்கும் அனைத்து கருத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது மனதுக்குள் இருமைக்கும் ஒருமைக்கும் நடக்கும் ஒருவித யுத்தம்தான். இதனை முழுவதுமாக அடுத்த பகுதியில் விளக்கமாக கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.