நான்காம் பரிமாணம் – 90

18. மாயஅதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். மாய அதிகாரத்தில் இதுவரை வெளி உலகம் மட்டும் உங்கள் உடலில் இருக்கும் பல்வேறு காயங்களைப் பற்றி கூறிக் கொண்டு வந்தேன். இவை அனைத்தையும் மிஞ்சும் மாயங்கள் உங்கள் மூளைக்குள் பதுங்கி உள்ளன. அவை என்னவென்று கூறி இந்த அதிகாரத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மூளையின் விந்தை

உங்கள் அனைவருக்கும் கை கால் வலித்தால் என்ன செய்வீர்கள்? வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்துக் கொள்ளவோ அல்லது ஏதேனும் மருந்தை தடவிக் கொள்வீர்கள் அல்லவா? அந்த மருந்துகள் பெரும்பாலும் தற்காலிகமாக ஆவுது அந்த வலியை போக்கிக்கொள்ள உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் விபத்தில் கால்களை இழந்த ஒருவருக்கு இல்லாத கால் வலி ஏற்பட்டால் அதனை எவ்வாறு போக்குவது? நான் கூறுவது மிகவும் வேடிக்கையாக இருந்தால் கூட கை கால்களை இழந்தவர்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று! கால் என்ற ஒரு உறுப்பு இருந்தால் வலி ஏற்படலாம், ஆனால் இல்லாத காலில் எவ்வாறு வலி ஏற்படுகிறது? இதனைத்தான் உங்கள் விஞ்ஞானிகள் மாயாவியின் கால் (Phantom leg) என்று கூறுகிறார்கள்.

இதனை சிறிதளவாவது புரிந்து கொள்வதற்கு உங்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் உங்கள் கட்டளைக்கேற்ப அல்லது தன்னிச்சையாக இயங்கினாலும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாட்டு அறை உங்கள் மூளையில் தான் உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையில் தனியாக ஒரு கட்டுப்பாட்டு பகுதி செயல்பட்டு வருகிறது. உடலில் வலி ஏற்பட்டால் கூட அந்த வழியை நீங்கள் உணர்வதற்கு காரணம் மூளையில் இருக்கும் அந்த கட்டுப்பாட்டு பகுதி தான். ஒருவர் விபத்தில் தனது கால்களை இழந்தால் கூட கால்களை கட்டுப்படுத்தும் அந்த கட்டுப்பாட்டு பகுதி மூளையில் தொடர்ந்து வேலை செய்து கொண்டு தான் வரும்.  ஆனால் விபத்தில் கால்களை இழந்தவுடன் இந்த கட்டுப்பாட்டு அறை சற்று நிலைதடுமாறி தனக்கு கிடைக்கும் போலியான சமிக்கைகளை கூட வலி என்று நினைத்து உங்களுக்கு தீவிரமான வலியை கொடுக்கும். ஆனால் மருத்துவம் பார்ப்பதற்கு உண்மையிலேயே கால்கள் இல்லாத நாள் இப்படிப்பட்ட மாயமான வழியே சில காலங்களுக்கு கால்களை இழந்த அவர் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டுதான் வரவேண்டும். இதற்கு உங்கள் விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களைக் மீறினால் கூட தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்படாத ஒரு மாயமாக தான் இருக்கிறது. 

உங்கள் அங்கங்களை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளை கூட இதுபோன்று அரைகுறையாக நீங்கள் தெரிந்து கொள்வதற்கு சில வாய்ப்புகள் இருக்கின்றன.  ஆனால் முழுவதுமாக மூளைக்குள்ளே செயல்படும் செயல்பாடுகளின் மர்மங்களை உங்களால்  எளிதாக அறிந்து கொள்ளவே முடியாது. குறிப்பாக சொல்லப்போனால் அப்படிப்பட்ட ஒரு பண்பு உங்கள் மூளைக்குள் மட்டும்தான் இருக்கிறதா என்பதை கூட இதுவரை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டுதான் உணர்வுநிலை (Consciousness). இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களை கூட செயற்கை இதயத்தின் உதவியுடன் உடலின் அனைத்து பகுதிகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஆனால் உணர்வு நிலை என்பது எந்த ஒரு செயற்கையான கருவிகளும் கொடுக்கவே முடியாது. ஒவ்வொரு உயிரும் “நான்” என்பதை உணர்ந்து கொள்ளும் தருணம் அதுதான். ஒவ்வொரு உயிரினத்தின் அனைத்து அறிவு மற்றும் நினைவு மூளையில் பதிந்து உள்ளதால், நான் என்னும் உணர்வு நிலை உங்கள் மூளைக்குள் இருப்பதாக பெரும்பாலும் நம்பினாலும் உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு இதுவரை இதனை சிறிது கூட ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இது தான் உங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய மாயம்.

அப்படியானால் “நான்” என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே முடியாதா என்ன? இதற்குத்தான் விஞ்ஞானத்தை தாண்டிய மெய்ஞானம் என்னும் நிலையை மனிதன் அடைய விரும்பினான். சாதாரணமாக எந்த ஒரு உண்மையையும் மனிதன் கண்டுபிடித்த அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு உரையாட முடியும். ஆனால் மெய்ஞானத்தின் வினோதமான குணம் என்னவென்றால் அதனை உணரத்தான் முடியுமே தவிர மற்றவர்களுக்கு வார்த்தையால் விளக்குவது என்பது முடியாத காரியம். அப்படி விளக்க முயலும் பல்வேறு நபர்களை போலியான நபர்களாக உங்கள் உலகம் சித்தரித்து விடுகிறது. அதே சமயத்தில் அதை உணராத பலரும் கூட “நான்” என்பதை அவர்கள் உணர்ந்து விட்டதாக போலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் படைப்பில் மிகவும் அதிசயமான இந்த மாயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு உங்களிடம் இருக்கும் ஒரே உபாயம் அதனை வெளியில் தேடாமல் உங்களுக்குள்ளேயே தேட வேண்டியதுதான். அப்படி அதனை அறிந்து கொண்டு விட்டீர்கள் என்றால் அதற்கு மேல் புலனாகாத மாயம் என்ற ஒன்று உங்களுக்கு கிடையவே கிடையாது. முடிந்தால் முயன்று பாருங்களேன்.

இந்தப் பகுதியுடன் மாய அதிகாரத்தை நிறைவு செய்துகொண்டு அடுத்த பகுதியில் இருந்து புதிய ஒரு அதிகாரத்தை தொடங்குவோம்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -