நான்காம் பரிமாணம் – 86

18. மாயஅதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். என்னுடைய பார்வையில் நான் கடந்து வந்த பாதைகளில் நடந்த விஷயங்கள் பலவற்றையும் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டு வருகிறேன். இன்று மாய அதிகாரம் என்னும் புதிய அத்தியாயத்தை தொடங்கி மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் உங்களுக்கு எடுத்துக் கூற போகிறேன்.


மாய உலகம்

இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் பின்னால் ஒரு காரணம் ஒளிந்து உள்ளது. அப்படி இருக்கும் பொழுது மாயம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் எங்கிருந்து வந்தது? 

நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளும் எந்த ஒரு காரியமும் உங்கள் அறிவுக்கும் மூளையின் திறனுக்கும் உட்பட்டதாக தான் இருக்கும். ஆனால் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரினத்தின் மூளைக்கும் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் சக்தி இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி இருக்கும் பொழுது தங்கள் தர்க்கவியல் ஞானத்திற்கு மீறிய எந்த ஒரு நிகழ்வையும் உங்கள் மூளை மாயம் என்று கருதுகிறது. ஒரு சிறிய எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால் நீங்கள் சாதாரணமாக பார்க்கக்கூடிய மாயாஜால வித்தை காட்டுபவர் எடுத்துக்கொள்ளலாம். மாயாஜால நிபுணர் தன்னுடைய வித்தை காட்டும் பொழுது அவை அனைத்தும் உங்கள் சாமானிய எண்ணங்களுக்கு புலப்படாமல் இருக்கும் ஒரே காரணத்தால் தான் அதனை நீங்கள் மாயம் என்று கூறுகிறீர்கள் அல்லவா? உங்களுக்கு மாயமாக இருக்கும் செயல், வித்தை காட்டுபவருக்கு ஒரு சாதாரண வினையின் மூலமாக ஏற்படும் நிகழ்வு தான்! இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களுடைய அறிவை விட ஆற்றல் வாய்ந்த ஒருவருக்கு முன்னால் அவர் செய்யும் அனைத்தும் உங்களுக்கு மயமாகவே தோன்றும் வாய்ப்பு உள்ளது. அப்படியானால் உங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரும் மாயா ஜால வித்தைக்காரர் யார் தெரியுமா? இயற்கைதான்.

இயற்கைக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்ற தற்காத்துக்கொள்ள நீங்க போக வேண்டாம். ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் படைத்தது இயற்கை தான். குறிப்பாக சொல்லப்போனால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான். இவை காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியின் துணைகொண்டு தங்களுக்குள்ளே மாபெரும் அறிவாற்றலை உண்டாக்கி கொள்கின்றன. இத்தகைய இயற்கையின் அறிவாற்றல் தான் அண்டத்தில் மிகவும் உயர்ந்த அறிவாகும். இந்த அறிவைக்கொண்டு இயற்கை செய்யும் விஷயங்களில் பல உங்களுக்கு மாயாஜாலமாகத்தான் தோன்ற முடியும். இவற்றின் தொடக்கமாக மிகவும் எளிமையான செயல்முறை கொண்ட செடிகளுக்கு உள்ளிருக்கும் மாயாஜாலங்களை பார்க்க ஆரம்பிக்கலாம் வாருங்கள்.

நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டு உபயோகத்திற்காக மூங்கிலால் ஆன பொருட்களை பயன்படுத்துவீர்கள் அல்லவா? இந்த மூஞ்சி மரமானது தன்னுடைய உச்சபட்ச வளர்ச்சி அடையும் பருவத்தில் ஒரே நாளில் சுமார் 35 இன்ச்களுக்கும் அதிகமாக வளரும் தன்மை கொண்டது. சாதாரணமாக எந்த ஒரு உயிரும் வளரும் பொழுது இவ்வளவு அபரிமிதமான வளர்ச்சியை உங்களால் காண முடியாது. வேறு எந்த உயிரும் வளர முடியாத வேகத்தில் இதற்கு மட்டும் ஒரு மாய சக்தி எவ்வாறு வந்தது? ஒரு மூங்கில் செடி வளரத் தொடங்கும் சமயத்தில் தனக்குத் தேவையான அனைத்து செல்களையும் ஒரே ஈட்டில் உருவாக்கிவிடுகிறது. பின்பு அதன் பெயர்கள் மிகவும் வலுவடைந்த உடன் பூமியில் உள்ள நீர் சத்தை முழுவதுமாக உறிஞ்சிக்கொண்டு தன்னிடம் ஏற்கனவே இருக்கும் செல்களுக்கு செலுத்தி அதனை பருமனாக மாற்றிவிடுகிறது. ஆனால் அதிகப்படியான உயிர்கள் தனக்குள் இருக்கும் ஒரு செல்லை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பின்பு அதனை நான்காகவும் எட்டாகும் தொடர்ச்சியாக பெருகிக் கொண்டே போவதால் வளர்ச்சி அடைகின்றன. இப்படி தன்னுள் இருக்கும் செல்களைப் பிரித்து கொண்டு வளர்வதற்கு அதிக காலம் பிடிக்கும். இது போன்ற மிகவும் சிக்கலான செயல்முறை எதுவுமில்லாமல் மூங்கில் செடியானது ஒரு சாதாரண பஞ்சு போல் தண்ணீரை கொண்டு பருமனாகி தன்னுடைய செடியை வளர வைத்துக் கொள்கிறது. சொல்லப் போனால் வேறு எந்த உயிருக்கும் இவ்வளவு எளிமையான வளர்ச்சிப் பாதை கிடையாது. ஆனால் மிகவும் சிக்கலான செல்களை கொண்ட உங்களைப்போன்ற உயிர்களால் கூட அடைய முடியாத வேகமான வளர்ச்சியை அடைந்து காட்டுகிறது அல்லவா? ஒரு செல்லின் வளர்ச்சிக்கு உள்ளே ஒளிந்திருக்கும் சிறு விஷயம் கூட ஒரு மிகப்பெரிய மாயத்தை உருவாக்க முடியும் என்றால் உலகத்தில் உள்ள உயிர்கள் வேறு எவ்வளவு மாயங்களை தங்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டுள்ளன என்று தெரியுமா? அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -