காதலின் தீபம்

ஐந்து கவிதைகள்

- Advertisement -

காதலின் தீபம்

கண் விழித்து
கனவுகள்
துளிர்க்கின்றன
அன்பூவில்
கவிதைகள்
கமழ்கின்றன
இதழோடு இதழ் பதிய
முத்தங்கள் ரீங்கரிக்கின்றன.

??????????????????????????

எரிதழல்

கரை மீறும் புனல்
கட்டுக்குள் பாய்கிறது
நெஞ்சுள் கனல்
நெடு நெருப்பாய் பீறிடுகிறது
நீருக்குள் நீர்
கொதிக்கிறது
நிணத்துக்குள் நிணம்
வேகுகிறது.

??????????????????????????

கிரைண்டரைக் கொத்துமவளைக்
கொத்தப் போனது சேவல்
கூலி வாங்காமல் மேலும்
பணம் நீட்டிக் கேட்டாளவள் சேவலை.

??????????????????????????

நான்
எனக்குள்ளாக
கேட்டுக் கொள்கிறேன்
உண்மையை
என் கவிதைகளில்
சொல்லவில்லை
என்றால்…
நான் ஏன்?
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

??????????????????????????

திசையறியாது
பறக்கும்
காற்றாடிக்குத்
துணையாக நூலும் இல்லை.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -