தின்றால் போச்சு

மூன்று கவிதைகள்

- Advertisement -

தின்றால் போச்சு

நேற்றைக்குப் பிறந்த
கோழிக்குஞ்சின்
இளங் கறியைத்தானே
நேற்றைக்குப் பிறந்த
கழுகுக் குஞ்சின்
பிஞ்சு அலகால்
கவ்விக் கீறி, கிழித்துண்ண முடியும்!?

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

உடமை

பேரன்பின் பெருவெளியில்
துளிர்த்த முளையொன்றை
பெருங்கரம் கொண்டு
வாரியணைக்க,
மகரந்தமனைத்தும்
கங்குகளாகி
வெண்ணிற சாம்பலில்
நிறைந்தது பெருவெளி.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சுயம்

பிள்ளையை, கணவனை எழுப்பி
காலை, மதிய உணவு கொடுத்து
பாத்திரம் தேய்த்து
வீடு பெருக்கி
துணி காயவைத்தபடியே
ஊரிலிருக்கும் அம்மாவிடம் பேசி

தனக்கென ஒரு காபி தயாரிக்கையில்
அறுபது வயதாகியிருந்தது
அன்னம்மாவிற்கு!

காமராஜ்
காமராஜ்https://minkirukkal.com/author/kamaraj/
என்னை பாதித்த, பாதிக்கும் விடயங்களை எழுத்தாக்க முயலும் ஒரு சாதாரணன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -