வெண்மை சூழ்ந்த இதயம்
பிணைந்த நேசமது இரு உயிர்கள்
உறைந்த நொடியில் மடிந்திடுமோ…!
நிறைவேறாத ஆசையுடனும் கேள்வி
இல்லா வினாக்களுடன் மாயமாய்
சுழற்றும் காலத்தின் பிடியில் மறைகின்றேன்…!
வெறுமை புடை சூழ ஆழிப் பேரலையில்
சிதறிய வெற்று இதயத்தில் விசும்பும் சிந்தையுடன்
விடிகிறது என் பொழுது….!
உன் பிறவியின் அற்புதம் அறிய
ஆவலாய் அலைந்து
மானிடனைக் கடந்த இறைவனின் செதுக்கலென
அறிந்து மௌனித்தேன்…!
நேசப் பார்வை படாத மேனி தீயில்
பட்ட புழுவாய் துடிதுடித்துக் கருகி
ஈரப் பார்வைக்காகத் தவமிருக்கின்றதே…!
ஆசுவாசப்படுத்திய நிஜங்கள் திகட்டும் நினைவுகள்
மரணம் வரைக்கும் என்பதை
கடந்து சுவனம் வரை இதய அறையில்
ஓயாமல் ஒலித்திடுவேன் தலைவி…!
எழுத்துலகில் இன்னும் இன்னும் வளர வாழ்த்துக்கள்