சூர்யப்பாவை – 13

தொடர் கவிதை

- Advertisement -

நூல்களை அடுக்குவதில்
நேர்த்தி ஒன்று இருக்கிறது.
பார்த்ததும் எடுக்கத் தூண்டும்
எடுத்ததும் படிக்கத் தூண்டும்
எழில்மிகு நேர்த்தி அது.
பிடித்தமானவர்களின்
நினைவுகளை அப்படித்தான்
அடுக்கிவைத்திட வேண்டும்.
எண்ணியபோதெல்லாம் நம்
எண்ணமெங்கும் அந்நினைவு
சுவையாய்ப் படரவேண்டும்.

படர்தலில் வெளிப்படும் அன்பு
அடர்ந்து அடர்ந்து திரண்டு
காதலாய்க் கவர்ந்திழுத்தல் கட்டாயம்.
உடைகளின் தனித்த மணம்
உணர்வுகளில் தட்டியெழும்பி
உயிர்மாற்றி உடுத்திக் கொள்ளும்.
புதுநூல் புத்தாடை மணமாய்
நேசமது நெகிழ்த்த வேண்டும்
நூலிடை வெளியென்பது
விரல்களுக்கான புக்ககம்.
தொடதொட விரல்களெங்கும்
ஏக்கங்கள் பூக்கத் தொடங்கும்.

வினாக்குறி ஏக்கங்களையெலாம்
வியப்புக்குறி அணைப்பினால்
தீர்த்திடும் மாயக்கலைஞன் நீ.
அல்லும்பகலும் எனக்களித்து
இருகை அணைப்பிற்குள்
கனன்று கொண்டேயிருக்கும்
பெருங்காதற்கதிர் நீ சூர்யா.!!!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

1 COMMENT

  1. உடைகளின் தனித்தமணம்
    உணர்வுகளில் தட்டியெழுப்பி
    உயிர்மாற்றி உடுத்திக்கொள்ளும்….

    செறிவான வரிகள்……. வாழ்த்துகள் பிரபா.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -