இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்
கண்முன்னே கரைந்திடும் காலம் – பிடித்து
வைக்கும் உபாயம் உண்டோவென்று தேடினேன்…
ஆழ்கடல் சொன்னது வேண்டாம் வீண் முயற்சியென்று..
ஆகாயம் சொன்னது ஏன் இந்தப் பித்தென்று..
விண்மீன்கள் கொக்கரித்துக் களி நடனமாடியது…
தூரிகையால் தூண்டில் வரைந்தேன் அதில் மீன்கள் சிக்கக் கண்டேன்…
காகிதத்தில் மழையென்றெழுத மையெல்லாம் சொட்டக் கண்டேன்…
விரல்களின் நுனியில் பனிச்சிகரங்கள் தீண்டினேன்…
காற்றைச் செதுக்கிக் கவிதைகள் வரைந்தேன்..
ஜடமெல்லாம் ராசம் புரிய…
இயங்கியதெல்லாம் ஜடமாய் மாற…
எனக்குள் என்னைத் தேடி எல்லாமே நானென்றறிந்தேன்…
என் உள்ளங்கையில் காலம்
உறைந்து போய் நின்றது…