உன்னை நான் சந்தித்தேன் – குறும்படம்

- Advertisement -

அனைத்திற்கும் “ஆன்லைன்” என்று மாறிவிட்ட இந்த காலத்தில் உறவுகளுக்கு கூட இணையத்தை நம்பி இருக்க வேண்டுமா என்ற கேள்வி நம் அனைவர் மனதிலும் வந்திருக்கக்கூடும். அதற்கு “உன்னை நான் சந்தித்தேன்” எனும் 6 நிமிட குறும்படம், பதிலும் பாடமும் சொல்கிறது. சமூக வலைத்தளங்களே ஒரு தனி சமூகமாக மாறி விட்ட நிலையில், அதனை எப்படி சரியாக கையாள வேண்டும் என்கின்ற வழிமுறைகளையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் சமூக வலைத் தளங்களுக்கும் உண்டு. அந்த வகையில் “உன்னை நான் சந்தித்தேன்” குறும்படத்தின் ஊடகப் பங்குதாரராக இருப்பதில் உங்கள் மின்கிறுக்கல் மின்னிதழ் பெருமை கொள்கிறது. சிங்கைத் தமிழ்ச் சங்கம் நடத்திய “ஒரு குட்டிக் கதை சொல்லட்டா” குறும்படப்போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்தக் குறும்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கலைப் பணி மென்மேலும் சிறந்து வளரட்டும். குறும்படத்தைக் காண கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இந்துமதி மனோகரன் எழுதிய “உன்னை நான் சந்தித்தேன்” சிறுகதையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

உன்னை நான் சந்தித்தேன்

-ஆசிரியர், மின்கிறுக்கல்

2 COMMENTS

  1. முதல் முயற்சியே வெற்றிக்கனியை ஈட்டுமளவிற்கு அதில் உழைத்த அனைவர்க்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்???? வெற்றிகள் தொடரட்டும்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -