உயிரால் ஒன்றாகி உன்னையே
கதியென்று பாதம் சுற்றி கொடியாய்
படர்ந்து உற்றமும் சுற்றமும் துறந்து
பிணக்குகள் களைந்து மனையோடு இயைந்து மன்னவனை நெஞ்சில்
சுமந்து கட்டிக் காக்கும் இல்லாள்……!
குடும்ப சுமையறிந்து சிக்கனமாய்
செலவு செய்து கண்கள் புகை சூழ்ந்து
கண்ணீர் சொட்ட அன்பு கலந்து உணவு
சமைத்து கணவன் உண்டு மகிழ தன்
பசி மறந்து இன்புறும் இல்லாள்…..!
வழியனுப்பி வைத்த கணவனை
நினைத்து உருகி ஏக்கங்களோடு வாசலில் தவம்கிடந்து காணும் போது
முகம் மலர்ந்து கணவன் சிந்தை குளிர
புன்முறுவல் பூத்திடும் இல்லாள்….!
விதண்டாவாதம் தவிர்த்து பொறுமை
காத்து வாழ்க்கை எனும் சக்கரம் சுழல
மெழுகாய் உருகி அன்பால் அனைத்து
கலக்கம் நீக்கி தெளிவை கொடுக்கும்
இல்லாள்……!
இறை வார்த்தைகளை கனிவாய்
உரைத்து இறை அருளை சிந்தையில் விதைத்து பிரார்த்தனைகள் செய்து
பாவங்களை தவிர்த்து நன்மை ஊட்டும்
இல்லாள்…..!