இரண்டாம் ஆண்டு – இரண்டு போட்டிகள்

"நான் விரும்பும் காந்தி" கட்டுரைப்போட்டி மற்றும் "சிறந்த கருத்துரைப்பாளர்"க்கான போட்டி

- Advertisement -

நான் விரும்பும் காந்தி – கட்டுரைப்போட்டி (8 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்டோர்களுக்கான போட்டி)

அன்பார்ந்த மின்கிறுக்கல் எழுத்தாளர்களே/வாசகர்களே,

வரும் அக்டோபர் 2, மின்கிறுக்கல் தனது இனிதான பயணத்தின் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. அக்டோபர் 2, நம் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கும் நாள். நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவதரித்த நாள். அந்த நாளைக் கொண்டாடும் விதமாக மின்கிறுக்கல் இளையோர்களுக்கான கட்டுரைப்போட்டியை அறிவிக்கிறது. இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் போட்டிகள் இரண்டாக இருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா! ஆதலால் சிறந்த கருத்துரைப்பாளருக்கான போட்டி ஒன்றையும் அறிவிக்கிறோம். மின்கிறுக்கல் தளத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கு சிறந்த முறையில் ஆக்கப்பூர்வமாகப் பின்னூட்டமிடும் வாசகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.  

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள், கோட்பாடுகள், போராட்டங்கள் என அவரிடம் நாம் விரும்பி எடுத்துக்கொள்ள பல விடயங்கள் உள்ளன. நம் தேசத்திற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே, ஏன் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விற்கும் கூட காந்தியின் தேவை இன்று அதிகமாகவே இருக்கிறது. 

காந்தியடிகளிடம் உங்களைக் கவர்ந்த விடயங்கள் மற்றும் அவற்றைப் பின்பற்றினால் இன்றைய உலகம் எப்படி மாறும் என்பதை மையமாக வைத்து கட்டுரை ஒன்றை எழுதி [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.வெற்றிபெறும் கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

கட்டுரையின் தலைப்பு : நான் விரும்பும் காந்தி

கட்டுரைப்போட்டி விதிமுறைகள்:

 • நீங்கள் அனுப்பும் கட்டுரைகள் காந்தியடிகளின் சிறப்பை விளக்குவதாக இருக்க வேண்டும். எதிர்மறை சிந்தனையுடைய கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 
 • கட்டுரை 800 வார்த்தைகளுக்கு மிகாமல் unicode தமிழ் வடிவத்தில் .docx, .rtf, .txt கோப்புகளில் ஏதேனும் ஒரு வகையில் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • மின்னஞ்சல் தலைப்பு “நான் விரும்பும் காந்தி – கட்டுரைப்போட்டி” என்று இருக்க வேண்டும்.
 • நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூபாய் 500/- பரிசாக வழங்கப்படும். 
 • எட்டிலிருந்து பதினோரு வயதினர் ஒரு குழுவாகவும், பதினொன்றில் இருந்து பதினாறு வயதினர் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு கட்டுரைகள் மதிப்பிடப்படும்.
 • மின்னஞ்சலில் உங்கள் வயதினைக் குறிப்பிடுவது அவசியம். 
 • பிள்ளைகளின் சார்பாக பெற்றோர்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்.
 • பரிசுத்தொகை இந்திய வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்.
 • ஆசிரியர் மற்றும் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
 • போட்டியில் பங்கேற்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 20 செப்டம்பர் 2021 26 செப்டம்பர் 2021.

கீழ்க்கண்ட உறுதிமொழியில் உங்கள் சரியான வயதைக் குறிப்பிட்டு உறுதிமொழியை மின்னஞ்சலுடன் இணைப்பது அவசியம்.

கட்டுரை எழுதியவரின் வயது  (8 – 16). இக்கட்டுரையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன்.

இது ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்றும் உறுதிளிக்கிறேன்.

மேலும் இந்தப் படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன்.

சிறந்த கருத்துரைப்பாளர் போட்டியின் விதிமுறைகள்:

 • ஆகஸ்டு 25 முதல் செப்ட்டம்பர் 25 வரை மின்கிறுக்கல் தளத்தில் பதிவிடப்படும் பின்னூட்டங்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
 • பின்னூட்டங்கள் நாகரீகமாக இருப்பது அவசியம்.
 • சிறந்த கருந்துரைப்பாளர்கள் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 300/- பரிசாக வழங்கப்படும்.
 • பரிசுத்தொகை இந்திய வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்.
 • ஆசிரியர் மற்றும் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

வெற்றி பெறும் போட்டியாளர்களின் கட்டுரைகள் அனைத்தும் எழுத்தாளரின் புகைப்படம் மற்றும் சிறு குறிப்புடன் மின்கிறுக்கல் தளத்தில் வெளியிடப்படும். கட்டுரையை அனுப்பும் போட்டியாளர்கள் அனைவரும் மின்னஞ்சலில் கட்டுரையுடன் தங்களுடைய புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் சேர்த்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆசிரியர், மின்கிறுக்கல்

மின்னஞ்சல் : [email protected]
www.minkirukkal.com

1 COMMENT

 1. தேசத்தந்தையை நினைவு கூர்வது வணங்கத்தக்கது.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -