“அவருக்கு
பிடிக்குமென்று
அரை கிலோ கறி எடுத்து பொடியாக
நறுக்கி வறுத்து
சமைத்து வைத்து
காத்துக் கொண்டிருக்கிறாள் அம்மா
விடியும் வரை
மேலிருந்து
கீழிறங்கி வராமல்
அழுதுகொண்டிருக்கிற
அம்மாவை
உற்று பார்த்தபடியே
சிரித்துக் கொண்டிருக்கிறார்
ஒரு வருடத்திற்கு
முன்பு இதே நாளில் புகைப்படமாக தொங்கவிடப்பட்ட அப்பா …..!!!!
Super…👏👏👏