மெய்நிகர் உலகம் – 5

- Advertisement -

வணக்கம். பணம் எப்படி தன்னுடைய மதிப்பை இழக்கிறது என்றும் அதிகரிக்க வைக்கிறது என்பதை சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா? அது எப்படி சேவைகளை அளவிடும் மெய் நிகர வரையறையாக விளங்குகிறது என்பதை இந்த பகுதியில் கூறப்போகிறேன்.

சமூகத்தில் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியும் மெய்நிகர் வடிவமாக பணம் உருவாகிய பின்பு அனைத்து பொருட்களின் மதிப்பையும் உள்ளடக்கிய ஏற்ற இறக்கம் பணத்திலும் உருவானது. ஆனால் இவை அனைத்தும் அந்தப் பொருட்களின் சராசரி கடந்தகால தேவையைப் பொறுத்தே இருந்து வந்தது. இந்த நிலையில், பணமானது சேவையையும் எதிர் காலத்தையும் குறிக்கும் அடையாளச் சின்னமாக மாறிய பின்பு அதன் ஒத்த உபயோகமே மாறியது.

ஆதிகாலத்தில் பண்டமாற்று முறை வழக்கில் இருந்த போது சில பொருட்களை கொடுத்து அதற்கு பதிலாக மற்ற மனிதர்களை வேலை வாங்க ஆரம்பித்தார்கள். வேலைவாய்ப்பு என்பதே அப்பொழுதுதான் உண்டானது. நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் salary என்னும் வார்த்தை கூட Salarium என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது தான். பழங்காலத்தில் ரோமானிய வீரர்கள் நாட்டுக்காக போரிட முன் வந்த பொழுது அவர்களுடைய சம்பளமாக உப்பை பண்டமாற்று செய்து வந்தனர். அதன்பின்பு நாணயங்களும் பணமும் வந்தபின்பு கூட Salary எனும் வார்த்தை ஆங்கிலத்தில் நிலைத்துவிட்டது.

தனிப்பட்ட ஒருவன் தன்னுடைய எதிர்கால உழைப்பை பணமாக பண்டமாற்றம் செய்ய முடிந்தால், பல பேர் சேர்ந்து கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும் ஒரு நிறுவனம் தன்னுடைய எதிர்கால மதிப்பை இதேபோன்று நிலைநிறுத்த முடியும் அல்லவா? இந்த அடிப்படையில் உருவானதுதான் பங்குச்சந்தை! பணத்தின் மதிப்பு பொருட்களின் அடிப்படையில் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் இப்பொழுது நன்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது அதனை வருங்காலத்தில் குறைய விடாமல் வைப்பதற்கு வேறு என்ன செய்யமுடியும் என்று யோசித்த மனிதனுக்கு தோன்றியது அதனை ஒரு முதலாக மாற்றி மனிதர்களின் உழைப்பிற்கு ஈடாக ஒரு மெய்நிகர் வடிவத்தை கொடுப்பதுதான். நீங்கள் அன்றாட செய்திகளில் பங்குச்சந்தையில் ஏற்றமும் வீழ்ச்சியும் இருப்பதை பார்த்திருப்பீர்கள். வெறும் சில நிமிடங்களிலேயே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பு இழந்தது என்றால் என்ன? உண்மையிலேயே அவ்வளவு பணம் திடீரென்று எவ்வாறு காணாமல் போகும்? இது என்னுடைய பதில் எல்லாம் நீங்கள் வருங்கால சேவைகளுக்கு எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டாலே விளங்கிவிடும்.

ஒரு நிறுவனத்தில் 100 பேர் ஏதாவது ஒரு பொருளையோ சேவையை வழங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்த சேவைக்கு எதிர்காலத்தில் எவ்வளவு மதிப்பு இருக்கும் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கலாம். இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி அவை அனைத்தையும் சந்தையில் பத்திரமாக மாற்றி இருப்பதுதான் பங்குச்சந்தை. இந்த சந்தையில் இந்தப் பங்குகளை வைத்துள்ளவர் தனக்கு தேவையில்லாத பொழுது தேவையான மற்றொருவருக்கு விற்றுக் கொள்ளலாம். ஒரு நிறுவனம் திடீரென்று அனைத்து தரப்பு மக்களின் மதிப்பை இழந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஒரே நிமிடத்தில் பங்குச் சந்தையில் அதன் மதிப்பு முழுவதுமாக காணாமல் போய்விடும். அப்படியானால் வீழ்வது எந்த ஒரு நேரடியான பொருளும் அல்ல. ஆனால் மக்கள் அந்த நிறுவனத்தின் வருங்காலத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை மட்டும்தான். இந்த பங்குச் சந்தை உருவான பிறகு பொருளுக்கு மட்டும் விலையில்லாமல் உங்களால் நீக்கமுடியும் தான் அனைத்துக்கும் ஒரு விலையை உருவாக்கி அதனை வியாபாரம் செய்ய முடிந்தது. இதிலுள்ள விதவிதமான மெய்நிகர் வடிவங்களை உங்களுக்கு அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன். அதுவரை நன்றி

-மீண்டும் சந்திக்கலாம்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -