அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் நாள் அன்று மின்கிறுக்கல் மின்னிதழும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறது. முதலாம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து நானூறுக்கும் மேற்பட்ட பல்சுவை பதிவுகளுடன் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிக்கும் பொழுது எடுத்து வைக்கும் முதல் அடியில் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அதே மகிழ்ச்சியுடன் வாசகர்களாகிய உங்களுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்.
அதேசமயத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சிறுவர்களுக்கான கட்டுரைப் போட்டியை அறிவித்திருந்தோம். ” நான் விரும்பும் காந்தி” என்ற தலைப்பில் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே நமது தேசத்தந்தையின் போற்றத்தக்க செயல்களை நினைவு கூறும் விதமாக அமைந்திருந்தது. ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு விதமான சிறப்புகளைக் கொண்டிருந்ததால் எங்களால் எது சிறந்தது என்று கூட தேர்ந்தெடுக்க முடியாமல் திக்குமுக்காடி போனோம். இரண்டு கண்களில் எது சிறந்தது என்று கேட்டால் எவ்வாறு பதில் சொல்வது? இறுதியாக போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.
பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுவர்களின் கட்டுரை மற்றும் தகவல்களை எங்கள் மின்னிதழில் வெளியிடுவதற்கு பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதி தேவை என்பதால் மின்னஞ்சலில் அதற்குண்டான தகவல்களை அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ஒவ்வொரு படைப்பாக பிரதி சனிக்கிழமை தொடர்ச்சியாக வெளியிட உள்ளோம். எங்கள் சார்பில் வாக்களிக்கப்பட்ட பரிசுகளும் உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன.
மாணவர்களின் எழுத்துப் பணி மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்.
தங்களின் படைப்புகள் மூலம் தொடர்ந்து மின்கிறுக்கல் இணையதளத்தை தொடர்ந்து ஆதரிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
ஆசிரியர்
மின்கிறுக்கல்