தலைப்பு : நான் விரும்பும் காந்தி
போட்டி : கட்டுரை
குறிப்புச் சட்டம்:
- முன்னுரை
- பிறப்பும் தாய்தந்தையரும்
- கல்விப் பருவம்
- பொதுச் சேவை
- இந்திய விடுதலைப்போராட்டம்
- சத்தியாகிரக இயக்கம்
- என்னை ஈர்த்த காந்தியின் செயல்கள்
- காந்தியின் சுயசரிதை
- காந்தியின் அழிக்க இயலாத நினைவிடங்கள்
- காந்தி என்னும் மலர் வாடும் தருணம்
- முடிவுரை
முன்னுரை :
வைசிய குலத்தைச் சேர்ந்த ஓதா காந்தி என்ற உத்தம சந்திர காந்தி என்னும் தாம் கொண்ட கொள்கையில் உறுதியுடையவராக இருந்தவருக்கு பேரனாகிய அன்பு, அகிம்சை, மனிதநேயம், தியாகம், வாய்மை என எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் நம் இந்திய நாடு விடுதலை பிற முக்கியக் காரணமாக இருந்த ‘அண்ணல் காந்தியின்’ வாழ்க்கையைப் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் தாய்தந்தையரும்:
குஜராத் மாநிலம் சௌராஷ்டிராவில் உள்ள சுதாமபுரி என்னும் போர்பந்தர் என்ற ஊரில் 1869 – ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் பிறந்தார். உண்மை, தியாகம், துணிவு, பொது அறிவு ஆகியவைகளை பெற்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் புத்திலிபாயும் இவரது தாய் தந்தையர் ஆவார்.
கல்விப் புருவம்:
உயர்நிலைக் கல்வியை ராஜ்கட் என்ற ஊரிலேயே முடித்தார். தனது 15-வது வயதில் குடும்ப நண்பரின் அறிவுரைப்படி இலண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
பொதுச் சேவை:
தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கு நிற வெறிக் கொள்கை நிலவி வந்தது. அதைக் கண்டு நெஞ்சம் கொதித்த காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்க மகிழ்ச்சியடைந்த தென்னாப்பிரிக்க இந்தியர்கள் காந்தியடிகளை தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். அதற்காக பலவாறு துன்பதிற்குள்ளாகிய அவர் நிறவெறிக் கொள்கையை கடுமையாக எதிர்த்துப் போராடினார்.
இந்திய விடுதலைப் போராட்டம்:
காந்திக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்த்ரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. பிப்ரவரி 1930-ல் ஆங்கிலேய அரசு, இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும் அதை ஆங்கிலேயர்கள் சட்டமாக்கினர். இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் குஜராத் கடலோரத்திலிருந்து தண்டி நோக்கி 240 மைல் 23 நாள்கள் நடைபயணம் செய்தார். கடல் நீரைக் காய்ச்சி உப்பு தயாரித்து பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து இந்திய விடுதலைப் போடாட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
சத்தியாக்கிரக இயக்கம்:
1930-ம் ஆண்டு மார்ச் 12 ம் நாள் ஆங்கிலேய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். 1942-ம் ஆண்டு ஆகஸ்ட்டு 8-ம் நாள் ஆங்கிலேயரை வெளியேற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை நடத்தினார்.
என்னை ஈர்த்த காந்தியின் செயல்கள்:
- குஜராத்தின் கேடா மாவட்டத்தின் விவசாயிகளுக்கு உதவியது.
- தன் தாய் பேச்சைத் தட்டாமல் கேட்டது.
- திருக்குறளின் வழியே நடந்தது.
- தியாகம், போராட்டம், உண்ணாவிரதம் என தன உயிரைப் பொருட்படுத்தாமல் இருந்தது.
- அகிம்சையின் வழியே இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது.
காந்தியின் சுயசரிதை:
காந்தி குஜராத்தி மொழயில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் “An Autobiography: the story of my experiments with truth” என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
காந்தி என்னும் மலர் வாடும் தருணம்:
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாள்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகையில் உள்ள சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஷே என்ற மகாராஷ்டிர இளைஞன் காந்தியை சுட்டுக் கொன்றான்.
காந்தியின் நினைவிடங்கள்:
- தமிழக அரசு காந்திக்கு சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
- மதுரையில் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப் படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
- முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் காந்தியின் மார்பளவு சிலையும், அருங்காட்சியகத்தில் மற்றோர் சிலையும், ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
முடிவுரை:
மனித நேயம், தேசத் தந்தை, தாத்தா எனப் பல்வேறு பொறுப்புகளைக் கொண்ட இமயம் சரிந்தது. ‘வருங்காலத் தலைமுறைகள் இப்படியொரு மனிதர் இந்தப் பூமிப்பந்தில் வாழ்ந்தாரா என்று வியப்போடு என்னச் செய்தார்’.
“புகழ் பெற்ற தாத்தாவே
எங்களுக்காக உனதுயிரை நீத்தாயே!
கதராடையே உனது உடைமை
உன்னை மதிப்பதே எண்களின் கடமை!”
பெயர்: ர.சினேகவர்த்தினி
வகுப்பு: பத்தாம் வகுப்பு