கூரிய கொம்புகள் பளபளக்க …
லாடம் பதித்த கால்களின்
சலங்கை சலசலக்க….
சீறிப்பாய்ந்ததால் புழுதியெல்லாம் கமகமக்க….
கூடி நிற்கும் கூட்டமெல்லாம் கிசுகிசுக்க….
இன்றே களம் இறங்குபவர்கள் கிறுகிறுக்க….
இதோ! மீசையைத் தடவி தொடைகளைத் தட்டி
காலையில் நடந்த வீரவிளையாட்டில்
பாய்ந்து வந்த காளையை அடக்கிய
இளங்காளையொன்று அடங்கப்போகிறதே ….
அதோ!புருவம் உயர்த்தி வியந்து நோக்கும்
அந்த மஞ்சள் தாவணியணிந்து
மல்லிகை மணம் சூழ
கைகளை மட்டும் நிறுத்தாமல்
தட்டிக்கொண்டே சிலையாகிய
அந்த மெழுகு சிலையிடம்!