வெகுநேரமெடுத்து இழையிழையாய்
இருவேறு செடிகளுக்கிடையே
இழுத்துக் கட்டிய அழகானதொரு மாளிகை.
போகும்போக்கில் சிதைத்து
சிரிப்பதவர்களின் இயல்புதான் என்றபோதிலும்..
அவர்களையெல்லாம் மாற்றுவதென்பது
நதியில் நான் புலம்பெயர்வது போன்றதாகும்.
அதற்காக நீந்தும் மீனாகவா மீள்வது?
வேருடன் பிடுங்கினாலும்
ஒவ்வொரு உயிர்செல்களும் மரிக்க மறுத்து
காற்றில் உருலும் கார்குழலாய் மீள்கின்றன.
இப்படித்தான் மீண்டும் மீண்டும்
தன்னம்பிக்கையோடு வலையை நெய்ய
எந்நேரமும் ஆயத்தமாக இருப்பதென்பதே
என் போன்ற சிலந்தியின் இயல்பாகிவிடுகிறது!
உயிர் மீள்தல்
கவிதை