பாலஜோதி ராமசந்திரன்

Avatar photo
1 POSTS0 COMMENTS
இவர் தற்போது வசிப்பது புதுக்கோட்டை நகரில். மூத்தப்பத்திரிகையாளர். விகடன், குமுதம், நக்கீரன் ஆகிய நிறுவனங்களில் சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டச் செய்தியாளராக இருபது வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்திருக்கிறார். "வல்லம் மகேசு” என்ற பெயரில் இவர் எழுதிய பல கட்டுரைகள் சாதிய, அரசியல், சமூக அதிர்வுகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவை. தஞ்சை அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில் பிறந்தவர். எனினும் தனது பூர்வீகம் என்று இவர் குறிப்பிடுவது, காவேரிபூம்பட்டினம் அருகில் உள்ள தலையுடையவர் கோவில் பத்து என்று அரசு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தலைச்சங்காடு என்ற சின்னஞ்சிறு கிராமத்தை. இவருடைய ஆதர்ஷ எழுத்தாளர் மௌனி. அவரைப் படித்தப் பிறகே, தான் எழுத வந்ததாகக் குறிப்பிடுகிறார். எழுத்தின் வழிகாட்டிகளாக, நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன், சாரு,கோணங்கி, இமையம் ஆகியோரை நன்றி பாராட்டுகிறார். கோவை சிறுவாணி வாசகர்மையம், சென்னை வானவில் பண்பாட்டு மையம், நன்னன் குடி, பேசும் புதியசக்தி, விடியல் இலக்கிய இதழ், தமிழ்ப்பல்லவி, நோஸன் பிரஸ் (பிஞ்ச்) உள்ளிட்ட ஏராளமான இலக்கிய அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறார்.

படைப்புகள்