அணில்கள் மரக்கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து சிரிக்கின்றன
நடக்க இயலாத அவன் சிறிது சந்தோஷப்பட்டுக் கொள்கிறான்
வனத்துள் காட்டுக்குதிரை மேய்கிறது
குளம் நீர்தூரிகையால்
அதனை வரைகிறது
பனிசூடிய மலையும் ஊசிலைமரங்களும் வியக்கின்றன
நதியில் மிதந்து வருகின்றன பூக்கள்
நீர்பரப்பில் இசை குமிழியிடுகிறது
மஞ்சள் ஒளியில் காதல் பொழிகிறது
அடிமை வாய்க்கு பூட்டு
எடுபிடி மூளையை
கட்டியிருக்கிறது சங்கிலி
மொழி திண்டாடுகிறது
வரப்புகளில் கரிசாலையும் நெருஞ்சியும் பூத்திருந்தன
கொறவையும் கெழுறும் நெல் பயிருக்குள் நீந்தித்திரிந்தன
கொக்குகளும் மடையான்களும் கூத்தடித்தன
ஒரு காலம்
இரவு குடிகாரன்
பகல் குடிகாரனை திட்டுகிறான்
பகல் குடிகாரன்
இரவுகுடிகாரனை ஏசுகிறான்
எல்லா குடிகாரன்களையும்
உலகம் வைகிறது.
அநித்யம்
கவிதை