பறவையொன்று
மனத்திரையில் பறக்க
வேண்டுதலோடு நிற்கிறான்
எதிரே நின்றுகொண்டிருந்தது தெய்வம்
ஏன் நின்றுகொண்டிருக்கிறது
வேண்டுதலோடு நடக்கத்தொடங்கியவன்
ஒரு சுற்று முடித்திருந்தான்
விண்ணைநோக்கி உயர்ந்த கோபுரத்தைப் பார்த்தவன்
எதைக்கண்டானோ
சட்டென்று வெளியேறினான்
குழப்பத்தோடு இருந்தவன்
தெளிந்துபோயிருந்தான்
சற்றுமுன்னும்
சற்றுப்பின்னுமான
தனிமையின் சலலசலப்பு
அடங்கிப்போயிருந்தது
சித்திரைத்திருவிழாவின் பெருங்கூட்டத்தில்
கடந்துபோன எல்லோரும்
என்றோ ஏதுமற்றவர்களாக
மண்ணில்தானே கிடக்கப்போகிறார்கள்
விதியின் கணத்தில்
வாழ்க்கையைத் துரத்தும்
அவர்களுக்கு பெறவும்
கொடுக்கவும் ஏதோஇருக்கிறது
நாம் எல்லோருமே
கடைசியாக ஒன்றை உச்சரிப்போம்
இந்தப் பெரும்திரள் காணும் மீனாட்சியைப்போல
எனக்கு யமுனா.