கட்டற்ற விலையேற்றம்…..

கவிதை

- Advertisement -

தினசரி வரிசையில் திண்டாடும்
உயிர்கள் கட்டற்ற விலையேற்றம்
கதறியழும் மரத்த விழிகள்…!

பஞ்சம் தலைதூக்கி பசி விதியாக
விற்று உண்ணவும் ஏதுமின்றி ஏழை
உடல் தீயால் சிதைகின்றது…!

பதுக்கும் வாணிபம் தலை தூக்க
மனிதாபிமானம் மறைந்து போய்
பொருள் விலையோ நஞ்சானது…!

வறுமை சிறைபிடித்த வாழ்வதை
வாழவும் வழி இல்லை நஞ்சு
உண்ணவும் வசதி இல்லை….!

தாய் உடல் மெலிந்ததால் சேய்
உடல் பாலின்றி மடிகின்றதே
இதை நினைக்கையில் நெஞ்சம்
பதைக்கின்றதே….!

அப்பாவி உயிர்களை பிழிந்து
குடித்து தாம் கொழுத்து சுகம்
காணும் கொடுங்கோல் அரக்கனின் கொடிய ஆட்சியில் பரிதாமாய் பறிபோகும் பல உயிர்கள்….!

புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -