Myindia.sg கவிதைப்போட்டி 2021

ஆறுதல் பரிசு

- Advertisement -

பொங்கட்டும் புது வாழ்வு

தனிமைகள் தின்னும் பொழுதிற்குப் பிறகான
புலனத்தின் தினப் புள்ளிவிவர எண்ணிக்கையில்
சேர்ந்திடாமல் கடத்திடும் ஒவ்வொரு நாளிலும்
கனத்த மௌனங்களைக் கடத்தலென்பது
அத்தனை எளிதாக இருந்து விடுவதில்லை.
‘பொண்டாட்டி புள்ளைகளெல்லாம்
விட்டுப்புட்டு கடல் தாண்டி காசு சேர்க்கனும்னு
வாழ்றதெல்லாம் வாழ்க்கையானு’ வந்து விழுகின்ற
கேள்விகளுக்குப் பதிலாகின்றன சிறியதும்
பெரியதுமாக தழும்புகள் ஆழமாய் மனதினில்.
ஊருக்கு போய் நினைவுகளை நிரப்பி வருவதற்கும்
வாய்ப்பில்லாமல் போக இளவயது நினைவுகளை
ஏங்கிப் பார்ப்பதிலேயே கழிந்து விடுகின்றன
வியர்வைப்பூக்கள் சுமந்து கூடு திரும்பும் கூண்டு
வண்டிக்கு வெளியே வழியும் சாயங்காலங்கள்.
பாசத்தையோ, காதலையோ, காமத்தையோ
மனதிற்குள்ளே புதைத்து விட்டு பகல் வேளைகளில்
புன்னகைத்தாலும் நடு இரவில் போர்வைகளுக்குள்

ஜோ
ஜோhttps://minkirukkal.com/author/joe/
ஜோ என்றழைக்கப்படும் ஜோசப் சேவியர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தர். முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் பட்டம் பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் 2018 ஆம் வருட சிறந்த இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருதினையும், 2019 வது ஆண்டில் சிங்கப்பூர்-200 கொண்டாட்டத்தில் அவர் இயற்றிய பாடலுக்காக இசைப்பாடலாசிரியர் விருதினையும் பெற்றிருக்கிறார். நவீன கவிதைகள் மீதான ஏக்கமும் புதுக்கவிதைகள் மீதான காதலும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் இணைய இதழிலும் வெளிவந்துள்ளன.

2 COMMENTS

  1. நல்வாழ்த்துகள் ஜோ…. தொடரட்டும் வெற்றிப்பயணம் ????

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -