யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 9

- Advertisement -

யமுனா வீடு
இரண்டு பேருந்து மாறிச் செல்லும் தூரத்தில்,
நகரத்தின் கடைசியில் இருக்கிறது……

யமுனா வீட்டில்,
யமுனா,
யமுனாவின் அம்மாவோடு,
நாய்க்குட்டியும் இருக்கிறது…….
ஞாயிற்றுக் கிழமையில்….
வாசு அண்ணா வந்து செல்கிறான்.

வெளிப்புற கிரில்கதவு சாத்தப்பட்டு,
உயரத்தில் கொக்கி மாட்டப்பட்டிருக்க,
தபால்காரன் வருகையும்,
பால்காரன் வருகையும்,
அரிதாகிப் போன நாட்களில்……
அபூர்வமாய் யாரேனும்
வழி தவறி விசாரிக்க வந்தால்
கீரிச்சிடும் கிரில் சப்தத்தில்
குறைத்திடும் நாய்க்குட்டியோடு,
யமுனாவும் சேர்ந்து கொள்கிறாள்…

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -