யமுனாவீடு -45

தொடர் கவிதை

- Advertisement -

யமுனா
இந்த நொடியிலிருந்து
நினைப்பதையெல்லாம் கேட்டுவிடு
கீறலாக்காதே உன்னை
கலங்கியிருப்பாய்
உனக்குப் புரியாதுதான்
எத்துணை கோபத்தையும்
நீ காட்டலாம்
கோபம் அதீத அன்புதானே
நீ எங்கே அழற்சியடைகிறாய்
நானும் அங்கே
நீ எங்கே நெகிழ்கிறாய்
நானும் அங்கே
காலங்களை அறிய நான்
சலிப்புறாமல் உரையாடுகிறேன்
இதுவரையிலும் இப்படித்தானே
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை
அன்பின் ஒவ்வொரு விரல்களையும்
இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச்சொல்லி
அவளிடம் மூர்க்கமாகத்தான் பேசினேன்
புரிந்துகொள்வதில்
யமுனா களைத்துப்போயிருந்தாள்
கடைசியாக அவளுக்கு
ஒரு சொல் தேவைப்பட்டது
மௌனமாக என் முகம் பார்த்தாள்
நீர்திரண்டிருந்த
கண்களை மூடிக்கொண்டேன்
ஆலமரம்போலச் சிரித்து
இமைகளைத் திறந்தேன்
யமுனா துள்ளிக்குதித்தோடிய கனவில்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -