யமுனாவீடு 96

தொடர் கவிதை

- Advertisement -

திசையறிந்துதான் ஓடுகிறாயா
உனது வாழ்வின் எல்லை எது
கடைசியாக யாருடைய கண்ணத்தில் முத்தமிட்டாய்
மனம் ஒப்பச் சொல்லுங்கள்

திரும்ப வராத காலம்
உங்களின் கண்களில் தெரிவதில்லை
நாளை எதற்காகக் காத்திருக்கிறோம்
இன்னமும் நாம் ஓடுவதை நிறுத்தவில்லை

நீங்கள் எதுவும் பேசக்கூடாது
ஒவ்வொருவருக்கும்
ஒரு சந்தர்ப்பம் அமையும்
நிழலைப்போலத் தொடருங்கள்
பரபரப்புக்கு வெளியே ஒன்று இருக்கிறது

உங்களின் மௌனங்களை
இந்த இரவில்
இந்தப் பகலில்
காணும் கனவுகளில்
ஒரு வரியாகச் சேர்த்திடுங்கள்
எல்லோரும் திகைப்புடன் பார்க்கட்டும்

ஒரு தேநீரைத்
தயாரிப்பதற்கு நேரமில்லை
பிறகு எதைத்தான்
கணிக்கமுடியும்
காதில் மெல்லச்சொல்லும்
கனவிலிருந்து எழுந்திரிக்கட்டும்

நெடுநேரம்
காத்திருப்பதே வாழ்தல் எனும்போது
காற்றைப்போல
நீதான் யமுனா
கண்களில் பொய்யில்லாமல்
சுற்றிச் சுற்றி வருவது

காற்றில் மிதக்கிறேன்
என்னைக் கைகளில் கொஞ்சம் ஏந்திக்கொள்ளேன் யமுனா

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -