யமுனாவீடு-90

- Advertisement -

வெளிச்சத்தோடு வீடுவரும் ஒருவர்
தான் வாழ்ந்துபார்க்க
நிச்சயமாக எதையும் செய்யமுடிவதில்லை
யாரையும் விசாரிக்காதீர்கள்

எல்லோரையும் சிரிக்கவைக்கும்
நீங்கள் கவனமாக இருங்கள்
வேறோன்றுமில்லை
அக அடையாளத்தை வெளிப்படுத்தாத
பைத்தியமொன்று தனியே இருக்கிறது

உங்களோடு உரையாடிக் கொண்டிருப்பவர்களில்
எல்லோரும் ஒரு நாள்
காணமல் போவார்கள்
யாரும் யாரையும் தேடுவதில்லை

கிடைத்த நேரத்தில்
டிக்டாக் பார்த்துவிடவேண்டும்
அறைகளுக்குள் அடைக்கப்பட்டவர்களாக
ஒவ்வொருவரும் இருக்கிறார்கள்

இன்னும் கொஞ்சதூரம்தான்
நடக்கவேண்டும்
எவரவரோ கடந்துசெல்லலாம்
சலனமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

தூரத்திலே தெரிந்துவிடுகிறது
சொல்லிச் சொல்லி மலைத்துவிடலாம்
ஒரு கதையை எழுதி முடித்திருப்பார்கள்

நிலவோடு உறங்கப்போகிறேன் யமுனா
கொஞ்சம் உன் மடிமீது தலைசாய்த்துக்கொள்கிறேன்
ரொம்பவே களைப்பாக இருக்கிறது யமுனா

: – பாண்டிதுரை

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -