நெகிழும் தன்மையையில்
கண்முன்னே நிற்கிறேன்
துல்லியமான மரணம் வரும்
தாங்கிக்கொள்ளும் முன்பாக
வயல்களைக் கடந்த பயணம் வேண்டும்
ஒரு முத்தத்தை
பெறுவதில் ஆரம்பித்து
எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவேண்டும்
நீண்டதொரு யாத்திரைக்கு
வாழ்விடம் தேவையில்லை
அப்பழுக்கற்ற
வளர்ந்த மழலையின் முகம்
இங்கு யாருக்குமில்லை
நாம் இருப்பதைத் தேடுவதில்லை
இதயத்தைத் துடிக்கவிட்டு
நிசப்தமாவே இரு
தனியனாய் காணாமல்
போய்விடச்சொல்லிக்
கணங்கள்தோறும் துடித்துக்கொண்டிருப்பதை
நீயேனும் அறிவாயா யமுனா
ஏதார்த்தம் எதைப்போன்றதோ
அதைப்போன்றதுதான் எல்லாமும்
நாம் கண்டுணர்வதில்லை
தேவதூதுவர்களும் வருவதில்லை
இதுவும் கடந்துபோக
யமுனா நீ விட்டுப்போவதில்லை
ஏதாவது புரிகிறதா யமுனா…