இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலம் என்னும் நான் ஒருமை அதிகாரத்தில் ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் உள்ள தொடர்பை சென்ற பகுதியில் கூறினேன். பொறுமையால் உங்களுடைய வாழ்வு எவ்வாறு தொடங்குகிறது என்பது பற்றியும் ஒருமைக்கு பின்னாலிருக்கும் அறிவியலைப் பற்றியும் இந்த பகுதியில் கூறப்போகிறேன். தொடங்கலாமா?
ஒன்று
உங்கள் உலகம் உருவாகிய உடன் மனிதர்களாகிய நீங்கள் உருவாக்க பல கோடி ஆண்டுகள் தேவைப்பட்டது. முதலில் ஒற்றை செல் உயிரினம் ஆக தொடங்கிய நீங்கள் தற்போதைய நிலைமையை அடைந்து உள்ளீர்கள். ஒற்றை செல் உயிரினங்கள் தங்களை சுற்றி உள்ள இலைகள் மற்றும் அழுகிய நிலையில் உள்ள எந்த ஒரு உயிரினத்தையும் உணவாக உண்டது. உயிரற்ற அழுகிய நிலையில் இருக்கும் ஒரு பொருளை சாப்பிட முடிந்ததால் அமீபாவானது தன்னுடைய உயிரை வளர்த்துக் கொள்வதுடன் வளர்ச்சி அடையவும் செய்தது. இந்த ஆரம்ப முயற்சியானது தான் எந்த உயிரற்ற ஒரு பொருளையும் தன்னுடைய உயிருக்குள் ஒன்றாக இணைத்துக் கொள்ளும் விந்தையாக மாறியது. நீங்கள் சாப்பிடும் பழமோ காயோ உங்களின் ஒரு பகுதியாகவே மாறுகிறது எப்படி என்பதை நீங்கள் என்றாவது யோசித்துப் பார்த்ததுண்டா? இந்த உரிமை தொடக்கத்திலிருந்து நடந்ததால் தான் உயிரினங்கள் வளர்ச்சி அடைந்து அதன் தற்போதைய உச்சகட்டமாக மனிதன் எனும் உயிரினம் உருவானது. இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். மனிதனுக்கு முன்பாகவே திமிங்கிலம் போன்ற மிகப்பெரும் பிராணிகள் இந்த உலகில் உருவாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தும் கூட மனிதன் ஏன் பரிணாம வளர்ச்சியின் உச்சம் என்று ஏன் கூறுகிறீர்கள் தெரியுமா? அவன் உடல் வளர்ச்சியை தாண்டி மனவளர்ச்சி என்னும் மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டதால்தான்.
மனவளர்ச்சி என்றவுடன் உங்கள் விஞ்ஞானிகள் எழுதிய மிகவும் சிரமமான கணிதக் கோட்பாடுகளை நினைத்துக் கொள்ள வேண்டாம். உரிமை எனும் கோட்பாட்டை உலகுக்கு பறைசாற்ற ஒன்று என்னும் எண்ணை உருவாக்கியது மனிதனின் மாபெரும் சாதனைகளில் ஒன்று தான். சற்று யோசித்து பாருங்கள். ஒன்று என்னும் எண் உலகில் இல்லை என்று வைத்துக்கொண்டால் நீங்கள் இதுவரை கண்டுபிடித்த விஞ்ஞானம் அனைத்துமே தவிடுபொடியாகும். ஆதிகாலத்தில் மனிதன் 5 இன்னும் எண்ணை குறிப்பிட வேண்டுமென்றால் 5 கோடுகளை வரைந்தான். ஆனால் இப்படியே போனால் 1000 என்பதை குறிப்பதற்கு ஆயிரம் முறை கோடு வரைய வேண்டும். பின்பு அதனை எண்ணி ஆயிரம் என்பதைப் புரிந்துகொள்வது அதனைவிட மிகவும் கடினமான ஒரு விஷயம். இவற்றை சுருக்கி ஒரு குறியீடாக வரைய முடியும் என்ற சிந்தனை எவ்வளவு ஆழமானது என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதுவும் யோசிக்கவே முடியாத ஒரு செடியை உண்டு அதனை இதுபோன்ற ஒரு மிகப்பெரும் யோசனையாக மாற்றும் செயல் இந்த இடத்திலேயே அரிதாக மிகச் சில இடங்களில் மட்டும்தான் சாத்தியம்! ஆனால் ஆரம்ப காலத்தில் மனிதன் எழுதிய இன்று மிகவும் விந்தையாக இருந்தன. குறிப்பாக எகிப்தில் 1000000 என்னும் எண்ணை குறிப்பதற்கு ஒரு கைது முட்டிபோட்டு உட்காருவது போன்ற ஒரு படத்தை வரைந்து வைத்தார்கள்! ஏனென்றால் அவ்வளவு பெரிய எண் அவர்களுக்கு சிறையில் இருக்கும் கைதிகளை குறிப்பதற்கு மட்டும்தான் பயன்பட்டது.
இதன் பின்பு ரோமானியர்கள் தங்களுடைய பாணியில் லத்தின் மொழியில் என்னை சுருக்கமாக குறிப்பிட்டிருந்தார்கள். சில நூறு எங்களை எழுதுவதற்கு இது போதுமானதாக இருந்தாலும் எண்களை வைத்து கூட்டல் கழித்தல் போன்ற கணக்கை எழுதுவது மிகவும் சிரமமாக இருந்தது. இங்குதான் இந்தியர்களை நான் பாராட்டியாக வேண்டும். அரபிக் எண்கள் என்று உலகம் முழுவதும் கூறப்பட்டாலும் முதலில் நீங்கள் தற்போது உபயோகப்படுத்தும் எண்கள் அனைத்தும் இந்தியாவில் தோன்றியது தான். ஏதோ ஒரு பொருள் இருப்பதை ஒன்று எனும் குறியீடு மூலமாக அடையாளப்படுத்தினால் ஒன்றுமே இல்லாதது கூட ஏதாவது ஒரு விதத்தில் அடையாளப்படுத்த வேண்டும் அல்லவா? அதுதான் 0. கணிதத்தில் இன்றுவரை மிகப்பெரும் கண்டுபிடிப்பாக இருப்பதே இந்த பூஜ்ஜியம் தான். ஒருமை என்னும் குறியீட்டை புகழ் பெறச் செய்தது பூஜ்ஜியம் என்னும் மற்றொரு நிலையான இருமை தான். அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.