நான்காம் பரிமாணம் – 92

19. மாற்ற அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் மாற்ற அதிகாரத்தில் மாற்றத்துக்கும் சுழற்ச்சிக்கும் இருக்கும் உறவைப் பற்றி சென்ற பகுதியில் கூறினேன். மாற்றங்களால் ஏற்படப்போகும் விளைவுகளை விரிவாக மேலும் இந்த பகுதியில் பார்க்கலாம்.

கோள்களின் பிறப்பு

எந்த ஒரு பொருளும் நிலையான ஒரு வடிவைப் பெறுவதற்காகத்தான் தொடர்ச்சியாக மாற்றங்களை தேடிக் கொடுக்கிறது என்று முன்பே பார்த்திருந்தோம். பெரு வெடிப்புக்குப் பின் விண்வெளியில் உண்டான சிதறல்கள் அனைத்தும் தங்களை ஒரு நிலையான வடிவத்திற்கு மாற்றி கொள்வதற்காகத்தான் ஒன்றோடு ஒன்று இணைந்தோ அல்லது சுழன்று கொண்டோ கோள்கள் மற்றும் நட்சத்திரங்களாக உருவெடுத்தன. ஆனால் அவ்வாறு உருவெடுத்த பின்பு கூட, தன்னிடமுள்ள சக்தியை மொத்தமாக இழந்து ஒரு அமைதியான நிலையை உருவாக்கிக் கொள்ள முனைந்தன. ஆனால் இங்கும் ஒரு பிரச்சனை வந்தது. மிகப் பெரும் நட்சத்திரங்கள் தங்களிடமுள்ள சக்தியை வெளிவிடும் பொழுது அவை அதனை சுற்றியுள்ள சிறு கோள்களால் கிரகித்துக் கொள்ளப்பட்டு மேலும் வெப்பம் அடைந்து வந்தன. இதற்கு சிறந்த உதாரணம் தான் சூரியனுக்கும் பூமிக்கும் நடக்கும் சக்தி பரிமாற்றம். சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமானது பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் பூமிக்கு ஒரு மிகச் சிறிய பகுதி வந்து சேர்கிறது. இந்த மிகச் சிறிய பகுதி வெப்பம் கூட பூமியில் நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு மாற்றங்களை எளிதாக உருவாக்கி விட்டது. அது என்னவென்று விரிவாகச் சொல்கிறேன் கேளுங்கள்.

இந்த அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் தங்களை ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு செல்ல தங்களிடம் இருக்கும் சக்தியை முழுவதுமாக வெளியே விடுகின்றன. பெருவாரியான பொருள்கள் இந்த செயலை இரண்டு விதமாகத் தான் செய்கின்றன. முதலாவதாக அணுப் பிளவு அல்லது அணுச்சேர்க்கை. சூரியனில் நடக்கும் இந்த செயலை செய்வதற்கு மிகப்பெரிய நட்சத்திரங்களாக அல்லது கிரகங்களாகவோ  இருக்க வேண்டும். சிறிய பொருட்களால் இதனை செய்ய முடியாது. அணுப் பிளவு அல்லது அணுச்சேர்க்கை செய்யமுடியாத அனைத்து பொருள்களும் செய்யும் மற்றொரு வினைதான் ஆக்ஸிஜனேற்றம். அதாவது, பிராணவாயுவை தங்களுடன் சேர்த்துக்கொண்டு தங்களுக்குள் உறைந்து நிற்கும் சக்தியை வெளிப்படுத்தி விடுவது தான் அது. உதாரணமாக மீண்டும் தீக்குச்சியில் எடுத்துக் கொள்ளலாம். காற்று இல்லாத ஒரு அறையில் நீங்கள் தீக்குச்சியை உரசினால் அதனால் தீப்பற்றி கொள்ள முடியாது. அங்கே நெருப்பை உருவாக்குவதற்கு பிராணவாயு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. 

ஒரு தீக்குச்சி எவ்வாறு தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறதோ அது போலவே உங்கள் பூமிப்பந்து கூட தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறது. சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பம் பூமியில் படுவதால் பூமிப்பந்தின் சக்தி நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது அல்லவா? சூரியன் ஒரு மிகவும் பெரியதாக இல்லாததால் பூமியால் அணுப்பிளவை உருவாக்கிக்கொள்ள முடியாது. அதனால் அதன் மேற்பரப்பில் பல்வேறு உயிரினங்களை உருவாக்கிக்கொண்டு அவை அனைத்தும் சூரிய சக்தியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிரகித்துக்கொண்டு தீக்குச்சி போலவே ஆக்சிஜனேற்றம் அடைந்து தங்களது சக்தியை வெளியில் விட்டு விடும். இந்த சக்தி அனைத்தும் பூமியின் மேற்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு சென்று விடும். அப்படி பூமியின் மேற்பரப்பில் ஆக்சிஜனேற்றம் அடைவதற்காகவே உருவாக்கப்பட்ட உயிர்கள் என்னவென்று தெரியுமா? செடிகொடிகள் முதலாக மனிதன், மிருகம் போன்ற அனைத்து உயிரினங்களும் தான்! நீங்கள் விடும் சுவாசம் தான் உங்களது சக்தியை வெளியேற்றுவதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட கருவி. அதனை தொடர்ச்சியாக செய்து கொள்வதால் தான் உங்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையான மாற்றங்கள் நிகழ்கின்றன! சுருக்கமாக சொல்லப்போனால் இயற்கை உருவாக்கிய மாற்றத்திற்கான ஒரு வடிகால் தான் உங்களது மொத்த வாழ்க்கையுமே.  இதனை இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருப்பேன். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -