சிறு தூறல்..

கவிதை

- Advertisement -

சிறு தூறல் போதும்
அப்பிக் கிடக்கும் வெக்கை தணிய

ஒரு நத்தையின் நகர்வு போதும்
பேரமைதி நாள் முழுவதும்
நிலைகொள்ள

பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போதும்
வானவில்லின் வண்ணம் சேர்க்க

பனிக்குடம் சுமந்த புல்வெளி போதும்
கவிதையாய் நான் மாற

த அழகுராஜன்
த அழகுராஜன்https://minkirukkal.com/author/alagurajan/
எனது பெயர் த. அழகுராஜன். மதுரை மாவட்டத்தை சேர்ந்த கைலம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவன். இளங்கலை பட்டம் (விலங்கியல் துறை) பெற்று, கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் துறையில் பணிபுரிகிறேன். கடைநிலை ஊழியனாய் பணியை ஆரம்பித்து இன்று வேலையிட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கல்லூரி காலங்களிலிருந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் தாயுமானவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறேன். சிங்கப்பூரில் கவிமாலை மற்றும் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

2 COMMENTS

  1. பனிக்குடம் சுமந்த புல்வெளி ??? அருமை

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -