இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்
எல்லாவற்றையும் சேர்த்து
என்னுடையது என்றேன் நான்..
என்னையும் சேர்த்து
தன்னுடையது என்றது மரணம்.
————————————————————–
நான் விரும்பியவை
தொலைவில் இருப்பதாலேயே
அதிகம் விரும்புகிறேன்..
————————————————————–
வார்த்தைகளைக் கொண்டு
முடிக்க முடியாத என் கவிதைகளை
அன்பால் நிரப்புகிறேன்..
————————————————————–
மரணத்தைக் கண்டு
அஞ்சும் என்னை
உதிரும் இலையின் மெளனம்
கேலி பேசுகிறது