யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 5

- Advertisement -

மாமாவும் அத்தையும் பார்த்துக்கொண்டிருந்த
கடந்த வாரத்தின் ஒரு நாளில்தான்
தனது வலிகளைத் துறந்த யமுனா
பறந்து சென்றுவிட்டாள்
உயரப் பறந்து செல்லும் முன்
யமுனா என்ன நினைத்திருக்கக்கூடும் என்பதில் தொடங்கி
யாரைத்தேடிய இந்த பறத்தல் என்பதுவரையிலான
தொக்கி நிற்கும் கேள்விகளுடன்
யமுனாவை நினைத்துக் கொண்டிருப்பவர்களை
சூன்யத்தை நோக்கியே நகர்த்திச்செல்லும்
இந்தப் பறந்த ஆகாயத்தில்
“யமுனாவிற்கான ஓரிடத்தைக் கண்டடைந்துவிட்டால்”
நம்மிடம் வரும் வரை
அரவிந்தனுடன் பேசலாம்
அய்யப்பன் மாதவனின் கவிதையை வாசிக்கலாம்
நீண்டதொரு தேநீரைப்பருகலாம்
இல்லாது போயின்
அவநிதாவைப் போல
நள்ளிரவில் கிரில்கேட்டை பிடித்துக்கொண்டு
நாய்க்குட்டியுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -