யமுனா வீடு – 32

தொடர் கவிதை

- Advertisement -

அவள் மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய
ஒரு அழைப்பு வருகிறது
பேச ஆரம்பிக்கிறாள்
நீண்ட உரையாடல்
இதற்காகத்தான் அழைத்தேன் என்றவராகத்தான் இருக்கக்கூடும்
யாருடைய துயரங்களாக இருந்தாலும்
தீர்வுக்கு முன்னொரு ஆறுதலாக
அவர்களிடம்
தலையைக் கோதுவதைப்போல
பேசியிருப்பாள்
துளிர்த்த சிறு கண்ணீரை
புன்னகையாக மாற்றியிருப்பாள்
சிறு குழந்தை முத்தமிட்டதைப்போல
கைகளை இறுகப்பற்றிக்கொண்டதொரு உணர்வைத் தத்திருப்பாள்
மனம் அமைதியடைகிறது
கனவு போல முடிந்துவிடும்
ஒரு கதை யமுனாவிடம் முடிகிறது
இன்னொரு கதை யமுனாவிடம் ஆரம்பிக்கிறது

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -