யமுனா வீடு 99

தொடர் கவிதை

- Advertisement -

மரணத்தை ஏற்கத் தயாராக இல்லாமல்
நடக்கத்தொடங்கி விட்டேன்
விருப்பமானவர்கள் எதிர்படுவார்கள்
நம்பிக்கையுடன் கடக்கும் என்னை
கனவுகளிலிருந்து விடுவிப்பார்கள்
புதிதாக ஒன்றையும் செய்யவேண்டாம்
பூனைகளுக்கான உணவோடு நடக்கையில்
கொஞ்சம் புறாக்களுக்கும் எடுத்துச்செல்வேன்
தனிமையைக் கடக்க நடக்கிறேன்
எனக்கு முன்சென்ற பறவையைத் தொட வேண்டும்
என்னை விழுங்கிவிடும்
இந்தப்பொழுதில் இளைப்பாறமுடியாது
ஒரு புள்ளியில் நடக்க ஆரம்பித்தேன்
நடந்து கொண்டே இருக்கிறேன்
சில நேரங்களில் எனக்குள்ளும்
சட்டென மழை பெய்யும்
நீண்டதொரு மழைக்குக் காத்திருக்கலாம்
இப்போது நடந்துசெல்கிறேன்
இன்னொரு உலகத்தைப் பார்க்கவேண்டும்
நீ வா யமுனா
என் விரல்களைப்
பிடித்துக்கொண்டு நட

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -