ஒரு தேநீரை அருந்தும்போது
உங்களைச்சுற்றிப் பறக்கும் புறாவை
அனிச்சையாக் கை விரட்டுகிறது
தேநீர் வடை உங்களுக்கானது
யாரையும் குறைசொல்லவில்லை
தெரிந்தேதான் நடையைத் விரைவுபடுத்துகிறார்கள்
அவர்களுக்கெல்லாம் வேலையிருக்கிறது
நீங்கள் படித்தவர்தான்
பகுத்து அறிவதில்லை
மற்றவர்களின் குரலாகத்தான்
பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
உங்களுக்கோர் ஆன்மா இருக்கிறது
யாருக்காக எதைச்செய்திருக்கிறீர்கள் ?
தானியங்களைச் சேமிக்க
இன்னமும் தார்ப்பாயைத்தான் தேடுகிறோம்
உனக்கென்ன தேவையிருக்கிறது?
பட்டியலிடத்தேவையில்லை
இந்த வாழ்க்கையும் இப்படித்தான்
உனக்காக எதையும் செய்யவில்லை
பயமாக இருக்கிறது
பதறி எழுந்துவிடவேண்டாம்
நீ தூங்கிக்கொண்டிருக்கிறாய்
எனக்கொரு பிரச்சினை இருக்கிறது
தலைக்குள் இறங்கி நினைவோடு ஆட்டம்போட
ஆறுதலாயிருக்கும்
உன்னை அள்ளியணைக்கிறேன்
யமுனா
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்.