கண்மணி
என்னைத் தொந்தரவு செய்கிறேன்
யாரோ கூப்பிடுகிறார்கள்
உன்னைத்தான்
எவ்வளவு பைத்தியமாக இருக்கிறேன் என்பதை
நான் சொல்லவேண்டும்
தெரிந்தேதான் இருக்கிறது
அவர்கள் போய்விடுவார்கள்
சின்னஞ்சிறிய உலகத்தில்
எப்போதாவது சந்திக்கப்போகிறோம்
புன்னகைக்கப்போவது யாரோ
மறைந்துபோன சூரியன்
திரும்ப எழும்
மனம்தானே
மறந்துபோகாமல் இருக்கிறேன்
அதிகாலையில்தான்
பெரும்சப்தத்தோடு கடல்பார்த்தேன்
நீயா, அவளா
உரக்கச்சொல்லிக் கேவினேன்
கண்மணி
என்னைத் தொந்தரவு செய்கிறேன்
பெரும்அச்சம் சூழும்போதெல்லாம்
நீதானே யமுனா முன்செல்கிறாய்
அந்தக்கணத்தில்
கண்களைமூடிக்கொண்டு
பெரும் விரைவுச்சாலையில்
90
100
120
100
90
80
நீதானே யமுனா முன்செல்கிறாய்.




















