மெய்நிகர் உலகம் – 8

- Advertisement -

வணக்கம். ஒரு பொருள் மற்றும் அதனை சுற்றியுள்ள சேவைகள் ஆகியவற்றை கலந்து ஒரு மெய்நிகர் அடுக்கை உருவாக்கி மதிப்பு என்பது உருவாக இது எப்படி என்று சென்ற பதிவில் பார்த்தோம். இப்படிப்பட்ட மெய்நிகர் அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எந்த ஒரு பொருளுக்கும் அதன் அடிப்படை மதிப்பை மறந்து போகும் அளவிற்கு ஒரு போர்வையை உருவாக்க முடியும் என்று சென்ற பகுதிகளில் பார்த்துவிட்டோம். அப்படியானால் மதிப்பே இல்லாத ஒரு பொருள்கள் கூட மதிப்பை ஏற்றி அதனை எப்படி பண்டமாற்றம் செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்து நாட்டில் தூலிப் மேனியா (Tulip Mania) தினமும் ஒரு வினோத நிகழ்வு நடந்தது. தூலிப் அலசல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பணக்கார சீமாட்டிகள் இதனை அழகுக்காகவும் சில மருத்துவர்கள் இதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தி வந்தனர். அவள் திடீர் என்று சம்பந்தமே இல்லாமல் இந்த பூவுக்கு பன்மடங்கு மதிப்பு இருப்பதாக இங்கிருந்து கிளம்பிய ஒரு வதந்தியால் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மலர்களையும் மக்கள் வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் அந்த பூவின் மதிப்பு மற்ற பூக்களை விட சுமார் 100 முதல் 200 மடங்கு அதிகமாக விற்க ஆரம்பித்தது. உண்மையிலேயே அவ்வளவு மதிப்பு கொடுத்து வாங்கும் துலிப் மலர்களை வைத்து எதுவுமே செய்து விட முடியாது. ஒரு கட்டத்தில் அந்த மலர்கள் வாடி போக ஆரம்பிக்கும் பொழுது வேறுவழியில்லாமல் அதனை வாங்கியவர்கள் குறைந்த விலைக்கு விற்க ஆரம்பித்தனர். இதில் பெரு நஷ்டம் அடைந்தது நடுத்தெருவுக்கு வந்த பல பணக்காரர்கள் உண்டு. இப்படிப்பட்ட காரணமில்லாத நிகழ்வுகள் வரலாற்றில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும் இதில் விழுந்து ஏமாறும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடப்புக் காலத்தில் ஈமு கோழி முதல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் அதை இதே விதமான ஏமாற்று வேலைதான். மதிப்பே இல்லாத ஒரு பொருளையோ சேவையோ உங்களிடம் வாங்கச் சொல்லி இதன் மூலம் எதிர்காலத்தில் எங்கள் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்று நம்ப வைத்து விட்டார் இப்படிப்பட்ட விஷயங்களும் சாத்தியமாகும். நான் மேலே கூறிய அனைத்து நிகழ்வுகளும் சற்று யோசித்து பார்த்தால் எவ்வளவு போலியானது என்பது அனைவருக்கும் விளங்கிவிடும். ஆனால் சில விஷயங்கள் என்றுமே உண்மை போலவும் அதே சமயத்தில் தோழியாகவும் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வரவழைக்கும். உண்மைதான் சரித்திரத்திலும் எதிர்காலத்திலும் பல்வேறு சோதனைகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும். இப்படிப்பட்ட பொருட்கள் ஏற்படுத்திய தங்களுக்கும் இழப்புகளுக்கும் கணக்கே கிடையாது.

எந்த ஒரு பொருளுக்கு மதிப்பு எவ்வளவு என்பதை கடந்த பகுதிகளிலேயே பார்த்துள்ளோம். அதனை பரிமாற்றம் செய்து கொண்டு நீங்கள் தரக்கூடிய மற்ற பொருட்களின் அடிப்படையில்தான் பெரும்பாலான மதிப்பு தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் உலகிலேயே ஒரே ஒரு பொருள் மட்டும் தான் இது போன்று இருக்கிறது என்றால் அதற்கு எப்படி விலை வைப்பது? அத்துடன் ஒப்புமை செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதால் இந்த மொத்த உலகத்தையே அதற்கு விலையாக வைக்கலாம். இல்லை என்றால் அதற்கு மதிப்பு இல்லை என்று அதனை தூர எறிந்து விடலாம். இப்படிப்பட்ட பொருட்களும் இந்த உலகில் அதிகப்படியாகவே காணப்படுகின்றது. அதற்கு சிறந்த ஒரு உதாரணம் தான் கோகினூர் வைரம். 

கோஹினூர் வைரத்தை ஐதராபாத்தில் உள்ள சுரங்கத்தில் வெட்டி எடுத்தனர். அவ்வளவு பெரிய வைரம் உருவாவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் கூட பூமியை எடுத்துக் கொண்டிருக்கலாம். அது பூமியின் அடியில் புதைந்து இருக்கும் பொழுது அதற்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. ஆனால் வெளியே வந்தவுடன் அதனை உரிமை கொண்டாடிய மன்னர்களும் அரசாங்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக போரில் விழத் தொடங்கியது. அந்த ஒரு வைரத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மான் இருப்பார்கள் என்று சொன்னால் கூட மிகையாகாது. இந்தியா பாகிஸ்தான் ஈரான் ஈராக் போன்ற பல்வேறு நாடுகளுக்கு அது பயணம் செய்து இறுதியில் தற்பொழுது இங்கிலாந்து மன்னரின் மணி முடியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரத்தை இதுவரை யாரும் விலை கொடுத்து வாங்கியது கிடையாது. இதனை ஒரு பரிசாகவும் அல்லது போரில் வெற்றி பெற்ற அடையாளமாகவும் மட்டும்தான் மக்கள் இதனை அடைந்திருக்கின்றனர். மண்ணுக்குள் இருக்கும் போது எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்த ஒரு கல் வெளியே வந்தவுடன் இவ்வளவு மதிப்பு பெறுவதற்கு காரணம் மக்கள் அதன் மேல் வைத்திருக்கும் அபிமானம் தானே? அப்படியானால் இப்படிப்பட்ட தனிப்பட்ட குறியீடுகளை கொண்ட ஒரு சின்னத்தை நாமே உருவாக்கினால் அதற்கு அதிக மதிப்பு கொடுக்க முடியும் தானே? இந்த வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மெய்நிகர் வடிவம்தான் NFT (Non Fungible Token). இது என்ன என்பதை விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம். அதுவரை நன்றி.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -