வணக்கம். ஒரு பொருளின் கடந்தகால மதிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எதிர்காலம் மதிப்பையும் எடுத்துக்கொண்டு பங்குச்சந்தைகள் எவ்வாறு உருவாகின என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். எதிர்காலம் என்று வந்துவிட்டாலே நிலையாமை வந்து அத்துடன் சேர்ந்திருக்கும் பல்வேறு அபாயங்களும் இணைந்துவிடும். அந்த அவங்களுக்கும் ஒரு மெய்நிகர் வடிவத்தை நாம் எப்படி கொடுக்கிறோம் என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.
வங்கிகள் உங்களுடைய பணத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுத்து அதிலிருந்து வரும் வட்டியின் ஒரு பகுதியை உங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். பணத்தை கடன் கொடுப்பதால் வரும் ஆபத்து என்ன? கடன் வாங்கியவர்கள் அந்த பணத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல் மூழ்கிவிட்டார் கொடுத்த முதலுக்கே மோசமாகி பணம் திரும்ப வராது. ஆனால் வங்கியிலிருந்து கடன் பெற்றவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை என்றால் கூட வங்கியானது அந்த ஆபத்தை தன்னிடம் எடுத்துக்கொண்டு வங்கியில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுகின்றனர். இப்படி வங்கியானது முக்கியமான ஆபத்திலிருந்து உங்களை காப்பாற்றுவதால் தான் உங்களுக்கு வரவேண்டிய வட்டிப் பணத்தில் ஒரு பகுதியை வங்கி தன்னுடைய சேவைக்காக எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த ஆபத்தையும் நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் அதற்கும் பங்குச்சந்தை ஒரு வழி வைத்துள்ளது. இதனைத்தான் டெட் பண்ட்(Debt Fund) என்று பங்குச்சந்தையில் அழைக்கிறார்.
டெட் பண்ட் என்பது கடன் வாங்குபவர் களையும் கடன் கொடுப்பவர் களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு மெய்நிகர் கருவி. இதில் கடன் வாங்குபவர் தங்களுடைய தொழிலின் ஆபத்திற்கு ஏற்றார்போல நிர்ணயிக்கப்பட்ட ஒரு வட்டியை கொடுத்து கடன் வாங்குகிறார். இந்த கடன் பத்திரங்கள் அனைத்தும் ஈடாக வைக்கப்பட்டு பங்குச் சந்தையில் விற்பனைக்காக வைக்கிறார்கள். அதில் ஒரு சிறிய பகுதியை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஈடான கடன் பத்திர மதிப்பை உங்களுடைய பெயருக்கு நிர்ணயம் செய்துவிடுவார்கள். நீங்கள் கொடுத்த பணத்திற்கு ஏற்றார்போல கடன் வாங்கியவர் கொடுக்கும் அதிலிருந்து ஒரு ரு பகுதி உங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதில் வங்கி போன்ற எந்த ஒரு இடைத்தரகர் இல்லாததால் கடன் வாங்குபவர் கொடுக்கும் மொத்த வட்டியும் கடன் கொடுப்பவரயே சேரும். ஆனால் கடன் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் திவாலானால் அந்த ஆபத்தும் கடன் கொடுத்தவருக்கே சேரும்.
இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. கடன் வாங்கியவர் எப்படி திவால் ஆகலாம்? அவர் செய்து வரும் தொழில் லாபகரமாக இல்லாமல் நலிவடைந்து விட்டால் இப்படி ஆகலாம் அல்லவா? அப்படியானால் கடமை ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு கொடுக்காமல் அந்தத் தொழிலை ஒரு பங்கைக் கொடுத்து விட்டால் அந்தத் தொழிலில் நீங்களும் ஒரு முதலீட்டாளர் ஆக ஆகிவிடுவீர்கள். இப்படி செய்வதால் கடன் என்ற ஒரு பேச்சுக்கே இடம் இருக்காது. அந்தத் தொழிலில் லாபம் அடைந்தால் அதிலிருந்து ஒரு பங்கு உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒருவேளை நஷ்டம் அடைந்தால் அதற்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகமான ஆபத்து கொண்ட திட்டம்தான் இது. ஆனால் ஒருவேளை அந்த தொழில் லாபகரமானதாக இருந்தால் உங்கள் பணம் பன்மடங்கு லாபம் பெற்றுத் தரும். இதுதான் பங்குச் சந்தையின் அடிப்படை வியாபாரமாகும். பணம் என்பது ஒரு ஆச்சரியமான மெய்நிகர் குறியீடாக இருக்கும் பொழுது அதற்கு மேலே இவ்வளவு புதிய மெய்நிகர் வடிவங்களை புகுத்தி நாம் ஏற்படுத்திய கட்டமைப்பை பார்த்தீர்களா? யோசித்துப் பார்த்தால் ஒரு பொருளின் அடிப்படை மதிப்பைக் கூட மறக்கும் அளவிற்கு பல்வேறு குறியீடுகளை ஒன்றன் மீது ஒன்றாக உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் இத்துடன் நம் குறியீடுகள் நின்றுவிடுவதில்லை. இதற்கு மேலும் பல்வேறு விதமான அடுக்குகளை நாம் உருவாக்கி இருக்கிறோம். அதனை அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.