வணக்கம். யுத்தத்துடன் கலந்து விளையாட்டுகளை பற்றி இதுவரை பார்த்த நாம் அதற்கு மேலே இருக்கும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்க போகிறோம்.
ஆரம்ப காலங்களில் மனிதன் தனியாகத்தான் வேட்டையாடி தனக்கு வேண்டி உணவை தேடிக்கொண்டான். பின்பு விவசாயம் என்னும் மாபெரும் புரட்சியை கண்டுபிடித்த பொழுது வேறு எங்கும் நகராமல் ஒரே இடத்தில் குடியமர்ந்து கொண்டு மனிதன் குடியானவன் ஆனான். தொடர்ந்து நகர்ந்து கொண்டேன் நாடோடி வாழ்க்கை வாழும் பொழுது அதில் பல்வேறு ஆபத்துகள் இருந்தன. தெரியாத ஊருக்கு செல்லும் பொழுது அங்கே இருக்கும் நிலப்பரப்பு மனிதர்கள் முதலிய எந்த ஒரு நிலைமையும் புரியாமல் பல சமயம் அது அவனுடைய மரணத்திற்கு கூட வித்தாக அமைந்தது. ஆனால் ஒரே இடத்தில் குடியேறியவுடன் அப்படிப்பட்ட ஆபத்துகள் எதுவும் வராது என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு புதிய ஆபத்து வந்தது. அதாவது, செழுமையான ஒரு இடத்தில் ஒரு குழு குடியமர்ந்தால் அதனை அழித்துவிட்டு அங்கே புதிதாக ஒரு குழுவை உருவாக்குவதற்காக பல்வேறு இன குழுக்கள் படையெடுத்து வந்தன. இந்த நிலைமையில் கூட்டு யுத்தம் என்பது இயல்பாக உருவானது. ஒரு அணியாக சேர்ந்து கொண்டு எதிரணியை வீழ்த்துவது தான் இதன் நோக்கம்.
இப்பொழுது நேரடி யுத்தம் என்பதை தவிர பல்வேறு விதமான உபரி செயல்களும் முக்கியமாகிறது. முதலில் அனைவரும் ஒன்றாக திரண்டு ஒரே இடத்திற்கு வந்து சேர வேண்டும். அப்படி ஒரே இடத்தில் சேர முடியவில்லை என்றால் வெவ்வேறு இடங்களில் இருக்கும் குழுவுக்கு ஒரு தகவல் பரிமாற்ற முறையை உருவாக்க வேண்டும். அது எவ்வளவு வேகமாக இருக்கிறதோ அதை பொறுத்து அந்தக் குழுவின் வெற்றி தோல்வியும் அமையும். முதலில் தகவலை சொல்வதற்கு உளவாளிகளையும் தூதுவர்களையும் ஒவ்வொரு இனக்குழுவும் உருவாக்கியது. இவர்களுடைய முக்கிய வேலை வேறொரு தொகுதியில் இருக்கும் இனக்குழுவுக்கு தேவையான செய்திகளை கொண்டு சேர்த்து பின்பு அதற்கான பதிலை கொண்டு வருவது தான். உங்கள் எல்லாருக்கும் மாரத்தான் போட்டியை பற்றிய கதை கண்டிப்பாக தெரிந்திருக்கும். கிரேக்க நாட்டில் மாரத்தான் என்பது ஒரு சிறிய ஊர். இங்கே நடந்த யுத்தத்தின் வெற்றி செய்தியை கொண்டு சேர்ப்பதற்காக ஒரு தூதுவன் தொடர்ச்சியாக பலநூறு கிலோமீட்டர் ஓடினான். இறுதியில் வெற்றி செய்தியை கூறி முடிக்கும் பொழுது சோர்வினால் உயிரிழந்து போனான். இதனை நினைவு கூறும் விதமாக போர் நடந்த இடம் ஆனா மாரத்தான் பெயரிலேயே உருவானது தான் மாரத்தான் விளையாட்டு. சுருக்கமாக சொல்லப்போனால் போரை தாண்டிய தகவல் தொழில்நுட்பத்தின் மெய்நிகர் வடிவம்!
இப்படி விளையாட்டாக தொடங்கிய தகவல் தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் சென்றது தெரியுமா? நீங்கள் இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் இணையம் கூட அதற்காக உருவாக்கப்பட்டது தான். இரண்டாம் உலக யுத்தத்தில் நேசநாட்டு படைகளான பிரிட்டனின் படைகள் உண்மையிலேயே அச்சு நாடான ஜெர்மனியை விட மிகவும் வலு குறைந்ததாக தான் இருந்தது. ஆனால் போரின் இறுதி வரை ஜெர்மனி ஆல் பிரிட்டனை பிடிக்கவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் பிரிட்டன் விஞ்ஞானிகளின் தொழில்நுட்பம் தகவலை பரிமாறுவதில் மிகவும் ரகசியமாகவும் கனகச்சிதமாகவும் செயல்பட்டது. ஆனால் ஜெர்மனியர்கள் பயன்படுத்திய எனிக்மா மிஷின் அவ்வளவு பாதுகாப்பானதாகவும் வேகமாகவும் இருக்கவில்லை. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்தை வெறும் ராணுவ தேவைக்காக பயன்படுத்தினால் அது அவ்வளவாக தொடர்ந்து வளர்ச்சி அடையவில்லை. இது நல்ல அமெரிக்க விஞ்ஞானிகள் அவர்களுடைய அனைத்து ராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் மக்களின் சாதாரண பயன்பாட்டுக்கும் கொண்டு வந்து விட்டனர். அதன் பின்பு மொத்த உலகமும் அதனை முன்னேற்றி தொலைபேசி முதல் இணையம் வரை உள்ள அனைத்து சாதனங்களையும் உருவாக்கினர். சுருக்கமாக சொல்லப்போனால் ராணுவ தேவைக்காக பயன்படுத்திய இணையம் மக்களின் பொழுதுபோக்கு தேவைகளுக்காக கூட பயன்பட ஆரம்பித்த உடன் தான் அது உண்மையிலேயே வளர ஆரம்பித்தது. இதிலிருந்தே விளையாட்டு என்பது வேறு ஒரு உண்மையான தேவைக்கான பயிற்சி என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும்.
இதுவரை பார்த்த விளையாட்டுகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் உடல் மற்றும் மன உழைப்பை தேவையாக கொண்டிருந்தது. ஆனால் இணையம் வந்தவுடன் புது விதமான கேளிக்கை விளையாட்டுகளின் உருவத்தில் உருவானது. அதனைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். அதுவரை நன்றி.