வணக்கம். பணத்தில் இருக்கும் மெய்நிகர் வடிவங்களாக உலகில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களை பற்றி சென்ற பகுதிகளில் விரிவாக பார்த்தோம் அல்லவா? ஆனால் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனை இந்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்.
பொதுவாக எந்த ஒரு பணத்திற்கும் அதனை வழங்கும் வங்கி அல்லது நிறுவனங்கள் தங்கள் அரசு இலச்சினையை அதில் ஒப்பமிட்டு கொடுக்கும். ஒரு அரசை கட்டமைக்க முக்கியமான தேவை என்பது அதன் மக்கள்தான். எவ்வளவு பெரிய சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும் அதனை கட்டமைப்பதற்கு ஓட மக்கள்தான் தேவைப்படுவார்கள். அப்படியானால் அந்தப் பணம் என்பது அந்த பணத்தை மதிப்பிடுவதற்கு தயாராக உள்ள மக்கள் இருக்கும் வரை மட்டும்தான் செல்லுபடியாகும். வேறு ஒரு நாட்டிற்கு அல்லது குழுவிற்கு செல்லும் பொழுது அந்த பணம் மதிப்பில்லாதது ஆகிவிடும். இப்படி இருக்கும்பொழுது மெய்நிகர் கரன்சி என்பது எந்தவொரு அரசாங்கமும் அங்கம் வகிக்காமல் அதனை உருவாக்கியவர் யார் என்பதே தெரியாத நிலையில் இயங்கும் மர்மமான பொருள். உதாரணமாக உலகிலேயே மிகவும் புகழ் பெற்ற பிட்காயின் என்னும் கரன்சியை கண்டுபிடித்தவர் யார் என்பதே இந்த உலகில் இதுவரை தெரியாது! அந்த மரண மனிதரோ குழுவோ தனக்குத் தானே வைத்துக் கொண்ட புனைப் பெயர் சத்தோக்ஷி நகமோட்டோ. இவர் உருவாக்கிய இந்த கரன்சி இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் பொழுதும் இவர் எங்கே இருக்கிறார், எவ்வளவு மெய்நிகர் பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளார் என்பது இதுவரை யாருக்குமே தெரியாத ரகசியம். இப்படிப்பட்ட மனிதர்கள் உருவாக்கும் பண மதிப்பு எப்படி உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது? உருவாக்கிய நபரே இதனை அழித்துவிடும் ஆபத்து இதில் உள்ளது. உதாரணமாக நாளைக்கே கோடிக்கணக்கான புதிய பிட்காயின் மெய்நிகர் பணத்தை சத்தோக்ஷி சந்தையில் இறக்கிவிட்டால் அதன் மதிப்பு விழுந்து ஒன்றுமே இல்லாதது ஆகிவிடும்.
இருந்தாலும் இது உலகில் ஒரு புதிய யோசனையாக இருந்ததால் எப்படியோ பிட்காயின் மிகவும் பிரபலமாகி விட்டது. இது அடைந்து பிரபலத்தை பார்த்து ஆளாளுக்கு தனக்கென்று ஒரு புதிய கிரிப்டோகரன்சி உருவாக்க முனைந்தனர். இதன் விளைவாக உலகில் இன்று சுமார் 20 ஆயிரம் கற்புக்கரசிகள் புழக்கத்தில் உள்ளன. சில நூறு நாடுகளின் அரசாங்கங்கள் மட்டும் வைத்திருக்கும் பணத்தை இப்படி ஆயிரக்கணக்கான தனிநபர்கள் தனக்கென்று ஒரு கரன்சியை உருவாக்கிக் கொள்ளும் பொழுது அதன் மீது இருக்கும் மதிப்பு நாளடைவில் குறைந்து போய்விடும் அல்லவா? அதுதான் கிரிப்டோகரன்சி வைக்கும் நடந்தது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் இதனை புறக்கணிக்க ஆரம்பித்து மிகவும் அதிகமான வரிவிதிப்பை பிரத்தியேகமாக கொண்டுவந்தது. பிட்காயின் என்னும் ஒரே ஒரு கரன்சி மிகவும் பிரபலமாக இருந்தாலும், அதனைவிட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் புதிய கரன்சியை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல போலி நபர்களும் நிறுவனங்களும் ஒவ்வொரு நாளும் முளைத்துக் கொண்டே இருக்கிறது. இவர்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் மட்டுமே சந்தையில் தாக்க பிடிப்பார்கள். அதற்குள் இவர்கள் செய்யும் ஒரே ஒரு வேலை என்ன தெரியுமா? முடிந்தவரை மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக் கொண்டு செல்லாத ஒரு மெய்நிகர் கரன்சி அவர்கள் கையில் திணித்து விட்டு செல்வது தான்! உங்களுக்கு கணிப்பொறியில் மென்பொருள் எழுதத் தெரியும் என்றால் சுமார் பத்து நாட்களில் உங்களால் கூட ஒரு புதிய மெய்நிகர் கரன்சி உருவாக்க முடியும். இப்படி இருக்கும் பொழுது யார்தான் புதிய கரன்சியை உருவாக்கி திடீர் பணக்காரர்களாக முயலாமல் இருப்பார்கள்?
இங்கே ஒரு விஷயத்தை நாம் நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஆதிகாலத்தில் பொருட்களை மாற்றம் செய்து கொள்வதில் வரும் சிரம் அதற்காகத்தான் சித்திகளையும் பணத்தையும் நாம் உருவாக்கினோம். தொழிலுக்கு இது மிகவும் உறுதுணையாக இருந்தது. ஆனால் இந்த மெய்நிகர் வடிவம் தன்னை விரிவுபடுத்திக் கொண்டே செல்லும் பொழுது அதன் முடிவு மிகவும் அபாயகரமானதாகத்தான் முடிகிறது. ஏனென்றால், ஒவ்வொரு புதிய வடிவம் பிறக்கும் போதும் அதனை ஏற்றுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் பிரிந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் மிகச் சிறிய குழுவாக சுருங்கி விடுகிறது. அதன் பிறகு அந்த மெய்நிகர் வடிவத்திற்கு எந்த ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விடும். இதுவரை பணம் என்னும் ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதன் மெய்நிகர் வடிவங்களை பார்த்தோம். ஆனால் நாம் இந்த உலகில் ஏற்படுத்தி வைத்திருக்கும் மெய்நிகர் கொள்கைகள் கணக்கற்றவை. அவற்றில் சில முக்கியமான வடிவங்களையும் அடுத்த பகுதியில் பார்க்க ஆரம்பித்துவிடலாம். அதுவரை நன்றி.
-மீண்டும் சந்திக்கலாம்